மாமல்லபுரம்; செங்கல்பட்டு மாவட்ட பேரூராட்சி பகுதிகளில், வீட்டு குப்பை சேகரிக்க, பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டு உள்ளன.செங்கல்பட்டு மாவட்டத்தில், மாமல்லபுரம், இடைக்கழிநாடு, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட, 12 பேரூராட்சிகள் உள்ளன.இப்பேரூராட்சி நிர்வாகங்கள், வீடுகள், வர்த்தக கடைகளில், தன்னார்வ நிறுவனம் மூலம், குப்பை சேகரித்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துகின்றன.குப்பை சேகரிக்க, மினி லாரி, டிராக்டர், டாடா ஏஸ் என, வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. தற்போது, தலா, 2.30 லட்சம் ரூபாய் மதிப்பில், பேரூராட்சிப் பகுதி தேவைக்கேற்ற எண்ணிக்கையில், பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டு உள்ளன.இதேபோல், காஞ்சிபுரம் மாவட்ட, ஐந்து பேரூராட்சி பகுதிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இவை, மூன்று மணிநேர மின்சார சார்ஜில், 500 கிலோ எடையுடன், 30 கி.மீ., தொலைவு இயங்கும் திறன் உடையது என, பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE