பொது செய்தி

தமிழ்நாடு

சாலை சந்திப்பில் மணல் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

Added : டிச 01, 2020
Share
Advertisement
மாமல்லபுரம்; சதுரங்கப்பட்டினம் சாலை சந்திப்பில், குவிந்துள்ள மணலால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த, சதுரங்கப்பட்டினத்தில், திருக்கழுக்குன்றம் சாலையில், அணுசக்தி வளாக சாலை, இணையும் சந்திப்பு உள்ளது.அணுசக்தி வளாகத்தில், சீரமைப்பு பணிக்காக அகற்றப்பட்ட மணல், இப்பகுதியில் குவிக்கப்பட்டது. தற்போது,

மாமல்லபுரம்; சதுரங்கப்பட்டினம் சாலை சந்திப்பில், குவிந்துள்ள மணலால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த, சதுரங்கப்பட்டினத்தில், திருக்கழுக்குன்றம் சாலையில், அணுசக்தி வளாக சாலை, இணையும் சந்திப்பு உள்ளது.அணுசக்தி வளாகத்தில், சீரமைப்பு பணிக்காக அகற்றப்பட்ட மணல், இப்பகுதியில் குவிக்கப்பட்டது. தற்போது, இக்குவியலை அகற்றி, லாரிகள் மூலம், அணுசக்தி பணிக்கு மீண்டும் எடுத்துச் செல்லப்படுகிறது.மணல் ஏற்றிச்செல்லும் லாரிகள், சந்திப்பை கடக்கும்போது, அந்த மணல் சாலையில் குவிகிறது. இதனால், குவிந்து கிடக்கும் மணலால், இருசக்கர வாகனங்கள் வழுக்கி, நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகின்றன.அடிக்கடி விபத்தில் சிக்குவதால், மணலை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X