செங்கல்பட்டு; திருவடிசூலத்தில், பாதுகாக்கப்பட வேண்டிய, பண்டைய கால கோட்டை குன்றை, சமூக விரோத கும்பல், சூறையாடி விற்கிறது.
செங்கல்பட்டு அடுத்த, திருவடிசூலம் பகுதியில், பண்டைய கால குன்று கோட்டை உள்ளது. கடந்த, 400 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதி மன்னர்களான, காந்தவராயன், சேந்தவராயன் சகோதரர்கள், இங்கு ஆட்சி செய்தனர். பாறைக்குன்றில் கோட்டை அமைத்து, ஆட்சி செய்தனர்.விஜயநகர அரசு, படையெடுப்பின்போது, இப்பகுதியை கைப்பற்றி, கோட்டையையும் அழித்தாக கூறப்படுகிறது. இத்தகைய கோட்டை குன்று, அழிந்து வருகிறது.
இக்குன்றை பாதுகாத்து, வருங்கால தலைமுறைக்கு இது குறித்து உணர்த்த வேண்டிய சூழலில், சமூகவிரோத கும்பலால் சூறையாடப்படுகிறது.இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:இப்பகுதி சிறப்பை உணராத கும்பல், பாறைக்குன்றை சுரண்டி, கட்டுமான தேவைக்கு விற்று வருகிறது. இது குறித்து, மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும், பாதுகாக்கும் நடவடிக்கை இல்லை.அதிகாரிகளின் அலட்சியத்தால், தொடர்ந்து, குன்று சூறையாடப்படுகிறது. பழங்கால நினைவு பகுதியை பாதுகாக்காக, தொல்லியல் துறை, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE