கூத்திரம்பாக்கம்; கூத்திரம்பாக்கத்தில் சீரமைக்கப்பட்ட குளம், சில மாதங்களில் கரை உடைந்ததால், மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.காஞ்சிபுரம் அடுத்த, வேடல் - தொடூர் செல்லும் சாலையில், கூத்திரம்பாக்கம் உள்ளது. இங்கு, மாரித்தாங்கல் எனும் பகுதி உள்ளது.இங்கு, 2019 - 2020ம் ஆண்டு, மாநில நிதிக்குழு மானியத்தில், 18.23 லட்சம் ரூபாய் செலவில், குளம் துார் வாரி, கரை பலப்படுத்தப்பட்டு உள்ளது.சமீபத்தில் பெய்த வட கிழக்கு பருவ மழையால், குளக்கரையின் ஒரு பகுதி சரிந்த நிலையில், சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், குளத்தில் தண்ணீர் தேங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அரசு திட்டம் கொண்டு வந்த சில மாதங்களில், குளக்கரை சேதமடைந்து இருப்பது, கிராம மக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், முறையாக ஆய்வு செய்து, குளக்கரையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE