சேறு கலந்த குடிநீர் சப்ளை உத்திரமேரூர் மக்கள் அவதி

Added : டிச 01, 2020
Share
Advertisement
உத்திரமேரூர்; சேறு கலந்த குடிநீர் வினியோகம் செய்வதால், உத்திரமேரூர் பேரூராட்சி மக்கள் அவதிப்படுகின்றனர்.உத்திரமேரூர் பேரூராட்சியின், 18 வார்டுகளில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக, உத்திரமேரூர் ஏரி மற்றும் வெங்கச்சேரி செய்யாற்றில் ஆழ்துளை கிணறு மற்றும் திறந்தவெளி கிணறு அமைத்து, ஒரு நாள் விட்டு ஒரு நாள், குடிநீர்

உத்திரமேரூர்; சேறு கலந்த குடிநீர் வினியோகம் செய்வதால், உத்திரமேரூர் பேரூராட்சி மக்கள் அவதிப்படுகின்றனர்.உத்திரமேரூர் பேரூராட்சியின், 18 வார்டுகளில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக, உத்திரமேரூர் ஏரி மற்றும் வெங்கச்சேரி செய்யாற்றில் ஆழ்துளை கிணறு மற்றும் திறந்தவெளி கிணறு அமைத்து, ஒரு நாள் விட்டு ஒரு நாள், குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், இரு நாட்களாக வழங்கப்படும் குடிநீர், சேறு கலந்து வருகிறது. குடிக்க முடியாத நிலையில் தண்ணீர் உள்ளதால், பணம் செலவழித்து, கேன் தண்ணீர் வாங்க வேண்டிய நிலை உள்ளதாக, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இந்த நீரால், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைக்கு ஆளாகும் நிலை உள்ளது. எனவே, குடிநீரை சுத்திகரித்து வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து, பேரூராட்சி குடிநீர் பிரிவு அலுவலர் ஒருவர் கூறியதாவது:உத்திரமேரூர் ஏரிக்கு வரும் நீர் மற்றும் வெங்கச்சேரி செய்யாற்றில் வெள்ள நீர் காரணமாக, நிலத்தடி நீரே நிறம் மாறி வருகிறது. இருப்பினும், குளோரின் கலந்து குடிநீர் வினியோகம் செய்வதோடு, குடிநீரை காய்ச்சி குடிக்குமாறு, விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X