சென்னை; 'கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள், தனியார் பள்ளிகளில் படிக்க விண்ணப்பிக்கலாம்' என, தொழிலாளர் உதவி கமிஷனர் அறிவித்துள்ளார்.
சென்னை, சமூக பாதுகாப்பு திட்ட, தொழிலாளர் உதவி கமிஷனர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில், பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள், ஐந்தாம் வகுப்பு வரை படித்து, அதிக மதிப்பெண் பெற்றிருந்தால், தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.இதன்படி, வட்டாரத்திற்கு ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள், ஆறு முதல், பிளஸ் ௨ வரை பயில அனுமதிக்கப்படுவர்.எனவே, தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த, தொழிலாளர்களின் குழந்தைகளில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஐந்து மற்றும் பத்தாம் வகுப்பு படித்து, அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள், ஆறு மற்றும் பிளஸ் 1 வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.மேலும், விபரம் தேவைப்படுவோர், தி.நகர், உஸ்மான் சாலையில் உள்ள, தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE