பொது செய்தி

தமிழ்நாடு

உபரி நீரை தாங்குமா எண்ணுார் முகத்துவாரம்?

Added : டிச 01, 2020
Share
Advertisement
எண்ணுார்; வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து, உபரி நீர் அதிகளவில் வெளியேறினால், எண்ணுார் முகத்துவாரம் தாக்குப்பிடிக்குமா என, கேள்வி எழுந்துள்ளது.பூண்டிதிருவள்ளூர் மாவட்டம்,பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம், 35 அடி உயரமுடையது. ஆந்திராவின், அம்மாப்பள்ளி நீர்தேக்கம் உபரி நீர் திறப்பு மற்றும் மழை நீர் வரத்து காரணமாக, ஏரி, 33 அடியை

எண்ணுார்; வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து, உபரி நீர் அதிகளவில் வெளியேறினால், எண்ணுார் முகத்துவாரம் தாக்குப்பிடிக்குமா என, கேள்வி எழுந்துள்ளது.

பூண்டிதிருவள்ளூர் மாவட்டம்,பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம், 35 அடி உயரமுடையது. ஆந்திராவின், அம்மாப்பள்ளி நீர்தேக்கம் உபரி நீர் திறப்பு மற்றும் மழை நீர் வரத்து காரணமாக, ஏரி, 33 அடியை எட்டியதால், உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.உபரி நீரானது, பல பகுதிகளை கடந்து, கடைசியாக எண்ணுார் முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கும்.புழல்சென்னைக்கு, மற்றொரு முக்கிய நீராதாரமான, புழல் ஏரி நிரம்பினால், உபரி நீரானது கால்வாய் வழியாக, வடபெரும்பாக்கம், கொசப்பூர், ஆமுல்லைவாயல், எஸ்.ஆர்.எப்., சந்திப்பு, பர்மா நகர் இரும்பு பாலம், சடையங்குப்பம் மேம்பாலம் வழியாக, எண்ணுார் முகத்துவாரம் வழியாக, கடலில் கலக்கும்.சென்னையை, 'மலைப்பாம்பு' போல் சுற்றியிருக்கும், பக்கிங்ஹாம் கால்வாய், சென்னை தீவு திடல் அருகே, கூவத்தில்இருந்து பிரிந்து, சென்ட்ரல், மூலக்கொத்தளம், யானைக்கவுனி, ஆர்.கே.நகர், திருவொற்றியூர், கார்கில் நகர், சத்தியமூர்த்தி நகர், எர்ணாவூர், எண்ணுார் முகத்துவாரம் வழியாக கடலில் சென்று கலக்கும்.மூழ்கிய வடசென்னைகடந்த, 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, பூண்டி நீர்த்தேக்கம் திறக்கப்பட்டதால், கொசஸ்தலையில் ஆர்ப்பரித்த வெள்ளம், புழல் ஏரி உபரி நீர், கன மழையால் அதிகரித்த மழை நீர் வரத்தால், 60 ஆயிரம் கன அடிக்கும் மேல், உபரி நீர் முகத்துவாரம் வழியாக, கடலில் கலந்தது.அளவுக்கதிகமான உபரி நீரை, முகத்துவாரத்தின் சிறிய வழி தாக்குப்பிடிக்காமல், பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக பின்னோக்கி ஏறி, திருவொற்றியூர் மேற்கு பகுதி, ஆர்.கே.நகர் வரையிலான, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வெள்ள நீரில் மூழ்கின.இதற்கு, கடல் வாட்டமும் ஒரு காரணமாக கூறப்பட்டது.எண்ணுார் அனல்மின் நிலையத்தால், முகத்துவாரத்தை 'டிரஜ்ஜிங்' இயந்திரம் கொண்டு, அகலப்படுத்தும் பணியும், 2017ல், அனல் மின் நிலையம் மூடலுக்கு பின், படிப்படியாக நிறுத்தப்பட்டன. இதனால், முகத்துவாரத்தில் மணல் மேடுகள் ஏறின.பின், எண்ணுார் காமராஜர் துறைமுக நிதியான, 24 லட்ச ரூபாய் செலவில், முகத்துவார மணல் மேட்டின் மறுபுறம், பொக்லைன் மூலம், மற்றொரு வழி ஏற்படுத்தும் பணி, பொதுப்பணித்துறையால், 2018ல் துவங்கி, நான்கு மாதங்கள் மேற்கொள்ளப்பட்டன.அதுவும் காலப்போக்கில் மூடின. தற்போது, 86 லட்ச ரூபாய் செலவில், முகத்துவாரத்தை அகலப்படுத்துதல், மற்றொரு வழிப்பாதையும் திறந்து விடும் பணி, இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் நடக்கின்றன.தற்போது, 100 அடி அகல வழிப்பாதையில் மட்டுமே, உபரி நீர் கடலில் கலக்கிறது. பூண்டியில் குறைவான அளவே தண்ணீர் வெளியேறுவதால், தற்போதைக்கு பிரச்னை கிடையாது. புழல் ஏரியும் தற்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை.இருப்பினும், டிச., 1, 2 ஆகிய தேதிகளில், கனமழை மற்றும் அடுத்தடுத்த புயல் படையெடுக்கும் கணிப்புகளால், உபரி கால்வாய்களில், பல ஆயிரம் கன அடி உபரி நீர் ஆர்ப்பரிக்க வாய்ப்புள்ளது.அதற்குள், முகத்துவாரத்தை, அகலப்படுத்தும் பணியும், மற்றொரு நீர் வழிப்பாதை பணியையும் விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.அடையாறு ஆறுஆதனுாரில் துவங்கும் அடையாறு ஆறு, பட்டினம்பாக்கம், முகத்துவாரம் வரை, 42.6 கி.மீ., துாரம் உடையது. இதன் அகலம், இடத்தை பொறுத்து, 100 முதல், 1,640 அடி வரை உள்ளது.கடந்த, 2015ல் பெய்த கன மழையின் போது, கரையோர குடியிருப்புகள் மூழ்கும் அளவுக்கு ஆற்றில் வெள்ளம் சென்றது.அதுபோன்ற பாதிப்பு ஏற்படாத வகையில், 124 கோடி ரூபாயில் துார் வாரி, ஆழப்படுத்தி, கரை பலப்படுத்தப்பட்டது. இந்த பணி, இம்மாதம் துவக்கத்தில் முடிந்தது. இந்நிலையில், பருவமழை மற்றும் 'நிவர்' புயல் காரணமாக பெய்த மழையால், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட புறநகர் ஏரிகள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து கால்வாய் வழியாக வெளியேறிய வெள்ளம், அடையாறு ஆற்றில்சென்றது. இருந்தும், வெள்ள பாதிப்பு ஏற்படவில்லை.மழை நின்றபின், இருதினங்களாக, பட்டினம்பாக்கம் முகத்துவாரம் பகுதியில், கடல் அலை சீற்றத்தால், மணல் மேடுகள் உருவாகின. இதை அகற்றினால் தான், ஆற்று நீர் கடலில் தடையில்லாமல் கலக்கும்.இல்லையென்றால், அடுத்த புயல், கன மழைக்கு நீரோட்டம் தடைபடும்.இதை கருத்தில் வைத்து, பொதுப்பணித் துறை சார்பில், ஐந்து பொக்லைன் இயந்திரங்கள், முகத்துவாரத்தில் இறக்கப்பட்டுள்ளன. அதோடு, ஏற்கனவே சேர்ந்த குப்பையும் அகற்றப்படுகிறது.இதன்மூலம், அடுத்த கன மழைக்கு ஆற்று வெள்ளம் குடியிருப்புகளில் புகாமல், கரைபுரண்டு கடலில் சேரும் என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X