ஆவடி; ஆவடி, திருநின்றவூரில், பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.ஆவடி, விவேகானந்தர் நகர் குடியிருப்பில், இரண்டாவது மாடியில் வசிப்பவர் கார்த்திகேயன், 32; லேத் பட்டறை தொழிலாளி. இவரது மனைவி காயத்ரி, 28. கார்த்திகேயன் நேற்று வேலைக்குச் சென்றார். அவரது மனைவி காயத்ரி, மதியம் ரேஷன் கார்டை புதுப்பிக்கச் சென்று, வீடு திரும்பியபோது, பீரோவில் இருந்த, 5 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது. திருநின்றவூர், டி.ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்த் கண்ணன், 35, என்பவர், நேற்று காலை வீட்டை பூட்டி, அதே பகுதியில் உள்ள, தன் ஸ்டேஷ்னரி கடைக்குச் சென்றார். மதியம் வீட்டிற்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு, 5 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது. இச்சம்பவங்கள் குறித்து ஆவடி, திருநின்றவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE