செங்குன்றம்; மழை வெள்ளத்தில் மூழ்கி, ௨௦௦ ஏக்கர் நெற்பயிர்கள் பாழானதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சென்னை, செங்குன்றம் அடுத்த சோழவரம், காரனோடை சுற்றுவட்டாரங்களில், 1,500க்கும் அதிகமான ஏக்கரில், விவசாயம் செய்யப்படுகிறது. தற்போது, தை பருவ அறுவடைக்காக, பாபட்லா பொன்னி உட்பட பல்வேறு நெல் ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன. 'நிவர்' புயல்அங்குள்ள பஞ்செட்டி, தச்சூர், நெடுவரம்பாக்கம் சுற்றுவட்டாரங்களில் உள்ள விவசாயிகள், 200 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில், பாபட்லா பொன்னி ரக நெல் பயிரிட்டிருந்தனர்.இந்நிலையில், 'நிவர்' புயல் எதிரொலியால், திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக, இந்த பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர் முழுதும், வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தன.அதற்கு காரணம், கடந்த காலங்களில், சாலை உள்ளிட்ட பல்வேறு வசதிக்காக ஏற்பட்ட தனியார் ஆக்கிரமிப்புகள் தான். பஞ்செட்டியில் உள்ள அண்ணாமலை ஏரி நிரம்பி, போக்கு கால்வாய்கள் வழியாக, தச்சூர் அருகில் உள்ள, இஸ்ரா ஏரிக்கு நீர் செல்வது வழக்கம்.கோரிக்கைஆனால், ஆக்கிரமிப்புகளை கண்டு கொள்ளாத, வருவாய் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், சமீபத்திய மழை வெள்ளம் முழுதும், விவசாய நிலங்களில், ஐந்து அடிக்கு குளம் போல் தேங்கியது.அதனால், தை மாத அறுவடைக்கு காத்திருந்த நெற்பயிர்கள், நீரில் முழுமையாக மூழ்கி, அழுகி சேதமடைந்தன. அவற்றை, கால்நடைகளுக்கான தீவனமாக கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள், பயிர் சேதங்களை ஆய்வு செய்து, இழப்பீடுகள் வழங்க வேண்டும். மேலும், போக்கு கால்வாய் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்றவும், மாவட்ட நிர்வாகம், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.நாங்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளோம். தற்போது, ஒரு ஏக்கர் நெற்பயிரை விளைவிக்க, 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. நல்ல விளைச்சல் என்றால், ஏக்கருக்கு, 20 முதல், 25 மூட்டை நெல் கிடைக்கும். தற்போது, வெள்ளம் வடிந்து செல்ல வழியின்றி, விவசாய நிலத்தில் தேங்கி, பயிர்களை அழித்து விட்டது. இதனால், கடன் தான் அதிகரிக்கிறது. இதே நிலை நீடித்தால், விவசாயம் செய்வதே கேள்விக்குறியாகிவிடும். விவசாய கடனை, அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.எல்.ரவிச்சந்திரன், 50, பஞ்செட்டி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE