வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள, ஜோ பைடன், 78, தன் வளர்ப்பு நாயுடன் விளையாடும்போது தவறி விழுந்தார். இதில் காலில், லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
ஜோ பைடன், அமெரிக்க அதிபராக, அடுத்தாண்டு, ஜன., 20ல் பதவியேற்க உள்ளார். நிர்வாக மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், 'டைகர்' என பெயரிடப்பட்டுள்ள, தன், 2 வயது வளர்ப்பு நாயுடன், வீட்டில் விளையாடியுள்ளார் பைடன். அப்போது கால் இடறி, கீழே விழுந்தார். இதையடுத்து அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில், அவருக்கு காலில், லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்து உள்ளது.

'எலும்பு முறிவு தீவிரமடையாமல் இருப்பதற்காக, அவர் பல வாரங்களுக்கு, 'பூட்ஸ்' அணிய வேண்டியிருக்கும். மற்றபடி, தன் வழக்கமான பணிகளை அவர் மேற்கொள்ளலாம்' என, டாக்டர்கள் கூறியுள்ளனர். ஜோ பைடன் விரைவில் குணமடைய, குடியரசு கட்சியைச் சேர்ந்த, அதிபர் டொனால்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE