தே.ஜ., கூட்டணியிலிருந்து வெளியேறுகிறது மற்றொரு கட்சி

Added : டிச 01, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி : 'புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறவில்லை எனில் தே.ஜ. கூட்டணியில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்படும்' என கூட்டணி கட்சியான ராஷ்ட்ரீய லோக்தந்திரிக் தெரிவித்துள்ளது.பிரதமர் நரேந்திய மோடி தலைமையிலான தே.ஜ. கூட்டணி அரசு மூன்று புதிய வேளாண் சீர்திருத்த சட்டங்களை சமீபத்தில் அமல் படுத்தியது.இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாபை சேர்ந்த
BJP, NDA, Rashtriya Loktantrik Party, National Democratic Alliance

புதுடில்லி : 'புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறவில்லை எனில் தே.ஜ. கூட்டணியில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்படும்' என கூட்டணி கட்சியான ராஷ்ட்ரீய லோக்தந்திரிக் தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திய மோடி தலைமையிலான தே.ஜ. கூட்டணி அரசு மூன்று புதிய வேளாண் சீர்திருத்த சட்டங்களை சமீபத்தில் அமல் படுத்தியது.இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள் டில்லியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபை சேர்ந்த அகாலி தளம் கட்சியினர் தே.ஜ. கூட்டணியில் இருந்து ஏற்கனவே விலகியுள்ளனர்.


latest tamil news


இந்நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த ராஷ்ட்ரீய லோக்தந்திரிக் கட்சியினர் தே.ஜ. கூட்டணிக்கு புதிய நெருக்கடியை உருவாக்கி உள்ளனர். இது குறித்து ராஷ்ட்ரீய லோக்தந்திரிக் கட்சி தலைவரும் எம்.பி.யுமான ஹனுமன் பெனிவால் கூறியுள்ளதாவது: புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெறவேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷனின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.

விவசாயிகளுடனான இரண்டாம் கட்ட பேச்சை தள்ளிப்போட கூடாது. மத்திய அரசு உடனடியாக பேச்சை துவக்க வேண்டும்.இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் தே.ஜ. கூட்டணியில் தொடர்வது குறித்து சிந்திக்க வேண்டிய நிலை உருவாகும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜஸ்தானின் ஜாட் சமூகத்தினர் மத்தியில் ராஷ்ட்ரீய லோக்தந்திரிக் கட்சிக்கு மிகப்பெரிய செல்வாக்கு உள்ளது. அம்மாநிலத்தில் 10 - 15 லோக்சபா தொகுதிகளை இக்கட்சி தங்கள் வசம் வைத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
01-டிச-202023:44:21 IST Report Abuse
தமிழவேல் போகிறவர்கள் போகட்டும்.... வேணும்னா காசுகொடுத்து வாங்கிக்கலாம்.
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
01-டிச-202018:42:36 IST Report Abuse
mathimandhiri அங்கே சந்திர பாபு நாய்டு அட்ட்ரஸ் இல்லாம போனார் சிவ சேனா அடுத்த தேர்தல் வரை தாங்குமா தெரியாது. தேர்தலுக்குப் பின் காலி. ராஜ் தாக்கரே ஒருவேளை தலையெடுக்கலாம். அகாலி காங்கிரஸிடம் சரண் அடையலாம். ஜுனியர் பஸ்வான் எதோ ஆயிட்டார். நிதிஷ் மட்டுமே கெட்டிக் காரர். பிழைத்துக் கொண்டார். இந்த ஜாட் கட்சி ஆள் வீராப்பு எப்படியோ ?
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
01-டிச-202017:02:12 IST Report Abuse
Endrum Indian இங்கே பாரு வெளியே போகணுமா போ???அதனால் ஒரு மன்ணும் ஆகாது நீ தான் உந்தலையில் மண்ணை வாரிப்போட்டதாய் ஆகும்??இது தெரிஞ்சா சரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X