தேனி : சின்னமனுார், உத்தமபாளையத்தில் நெல் கொள்முதல் நிலையம் நாளை திறக்க ஏற்பாடு நடந்துவருகிறது.
தேனி மாவட்டத்தில் முதல் போக நெல் சாகுபடி 5955 எக்டேரில் மேற்கொள்ளப்பட்டது. நல்ல விளைச்சல் ஏற்பட்டு கடந்தவாரம் முதல் அறுவடை துவங்கியது. நெல் கொள்முதல் நிலையம் துவக்க விவசாயிகள் கோரினர். முதல் கட்டமாக உத்தமபாளையம், சின்னமனுாரில் நுகர் பொருள் வாணிப கழகம் கொள்முதல் நிலையம் நாளை துவக்க உள்ளது.
அறுவடையின் தீவிரம், கோரிக்கைக்கு ஏற்ப அடுத்தடுத்த ஊர்களில் திறக்கப்படும்.2019ல் கம்பம், கூடலுார், சின்னமனுார், உத்தமபாளையம், மேல்மங்கலம், கெங்குவார்பட்டி என 8 ஊர்களில் துவக்கப்பட்டது. மார்ச், ஏப்ரல் கோடை அறுவடையில் கொரோனா ஊரடங்கால் வெளிமாவட்ட வியாபாரிகள் அதிக வருகை இல்லாததால் அரசின் கொள்முதல் நிலையத்தை விவசாயிகள் அதிகம் பயன்படுத்தினர்.
2019ல் 13,750 மெ.டன் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஏ கிரேடு நெல் குவிண்டால் ரூ.1958, பொதுரகம் ரூ.1918க்கு கொள்முதல் செய்யப்படும். விவசாயிகள் எவ்வளவு நெல் கொண்டு வந்தாலும் கொள்முதல் செய்ய தயாராக உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE