புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், போலீசார் பற்றாக்குறையால், வழக்கு விசாரணை, ரோந்து செல்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
புன்செய்புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லை, ஈரோடு மாவட்டத்தில் துவங்கி, கோவை, திருப்பூர் மாவட்ட எல்லை வரை, 30 கி.மீ., பரப்பளவு அடங்கியுள்ளது. இன்ஸ்பெக்டர், இரண்டு எஸ்.ஐ., - எஸ்.எஸ்.ஐ.,க்கள், போலீசார் மற்றும் பெண் எஸ்.ஐ., போலீசார் உட்பட, 30 பேர் பணியில் இருந்தனர். தற்போது, 12 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். ஓராண்டாக இதுதான் நிலைமை. கோர்ட், தபால் பணி, வாரன்ட் உள்ளிட்ட பணிகளுக்கு போலீசார் செல்ல வேண்டியது இருப்பதால், சிலரை வைத்தே, ஸ்டேஷன் பணியை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஸ்டேஷன் பகுதியில் கிராமங்கள் அதிகம் உள்ளன. பல்வேறு வழக்கு தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ளது. குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிப்பதிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம் பணிச்சுமையால், போலீசாரும் மன உளைச்சலுக்கு ஆளாகி, வாகன சோதனை, ரோந்து பணியில் சரிவர ஈடுபட முடிவதில்லை. எனவே, புன்செய்புளியம்பட்டி ஸ்டேஷனுக்கு தேவையான போலீசாரை நியமிக்க, எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE