சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தோட்டா வெடித்து சிதறியதில் துண்டான மீனவரின் கைகள்

Added : டிச 01, 2020
Share
Advertisement
ஈரோடு: ஈரோட்டில், காவிரி ஆற்றில் மீன் பிடிக்க வீசிய தோட்டா, வெடித்து சிதறியதில், மீனவரின் கைகள் துண்டாகின. ஈரோடு, வைராபாளையம், செங்கோட்டையன் நகர், செங்கல் சூளை அருகே வசிக்கும், சுப்பிரமணி மகன் வசந்தகுமார், 32; மீனவரான இவர், வைராபாளையம் காவிரி ஆற்றில், நேற்று மாலை, 5:15 மணியளவில், தோட்டா (டெட்டனேட்டர்) வீசி, மீன் பிடித்து கொண்டிருந்தார். ஒரு டெட்டனேட்டரை தீயில் வைத்து வீசும்

ஈரோடு: ஈரோட்டில், காவிரி ஆற்றில் மீன் பிடிக்க வீசிய தோட்டா, வெடித்து சிதறியதில், மீனவரின் கைகள் துண்டாகின. ஈரோடு, வைராபாளையம், செங்கோட்டையன் நகர், செங்கல் சூளை அருகே வசிக்கும், சுப்பிரமணி மகன் வசந்தகுமார், 32; மீனவரான இவர், வைராபாளையம் காவிரி ஆற்றில், நேற்று மாலை, 5:15 மணியளவில், தோட்டா (டெட்டனேட்டர்) வீசி, மீன் பிடித்து கொண்டிருந்தார். ஒரு டெட்டனேட்டரை தீயில் வைத்து வீசும் போது, கையிலேயே வெடித்தது. இதில் இரண்டு கைகளும் துண்டாகி, நெஞ்சு பகுதியிலும் பலத்த காயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு, அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X