சேலம்: சேலம் மாவட்டம், கொடிநாள் நிதி வசூலில், இரண்டாவது முறையாக, இலக்கை மிஞ்சி சாதனை படைத்துள்ளது.
நாடு முழுவதும் வரும், டிச.,7ல், 74வது கொடிநாள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அரசின் சேவை பெறுவோர், விரும்பிய தொகையை, கொடிநாள் நிதியாக செலுத்தலாம். சேலம் மாவட்டத்தில், இதற்கு முன் அதிகபட்சமாக, 2013ல், ஒரு கோடியே, 77 லட்சத்து, 22 ஆயிரத்து, 660 ரூபாய், கொடிநாள் நிதி வசூலானது. தற்போது நேற்று மாலை, 5:30 மணி நிலவரப்படி, ஒரு கோடியே, 64 லட்சத்து, 58 ஆயிரத்து, 500 ரூபாய் வசூலாகி உள்ளது. தொடர்ந்து, வசூல் நடக்கிறது. நடப்பாண்டு, சேலம் மாவட்ட இலக்கு, ஒரு கோடியே, 57 லட்சத்து, 96 ஆயிரம் ரூபாய். இலக்கை தாண்டி, இரண்டாவது முறையாக, கொடிநாள் நிதி, திரட்டப்பட்டு வருகிறது. கடந்தாண்டு இலக்கு, ஒரு கோடியே, 43 லட்சத்து, 60 ஆயிரத்து, 200 ரூபாய். ஆனால், 2.14 கோடி ரூபாயை தாண்டி வசூலானது.
* மாநகராட்சியில் கடந்தாண்டு, 9.71 லட்ச ரூபாய் இலக்கு மட்டுமே அடைந்தது. தற்போது, 10.69 லட்ச ரூபாயில், இதுவரை, 9.84 லட்ச ரூபாய் மட்டுமே திரட்டியுள்ளது. கலெக்டர் ராமன், வரும், 7ல், கொடிநாள் நிதி, உண்டியல் வசூலை துவக்கி வைக்கிறார். அதே நேரம், கொரோனா பரவலை தடுக்க, தேநீர் விருந்து ரத்து செய்யப்படுகிறது என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE