பொது செய்தி

தமிழ்நாடு

நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து தி.மு.க., கவுன்சிலர்கள் போராட்டம்

Added : டிச 01, 2020
Share
Advertisement
ஆத்தூர்: ஆத்தூர் ஒன்றிய கவுன்சில் கூட்டம் நேற்று, அ.தி.மு.க.,வை சேர்ந்த சேர்மன் லிங்கம்மாள் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:தி.மு.க., கவுன்சிலர் பத்மினிபிரியதர்ஷினி: நிதி ஒதுக்கீடு இல்லாததால், அடிப்படை வசதிகள் செய்ய முடியவில்லை. அப்பமசமுத்திரம், தென்னங்குடிபாளையத்தில் கிருமி நாசினி மருந்து தெளிக்கவில்லை.அ.தி.மு.க., கவுன்சிலர் ரவிச்சந்திரன்:

ஆத்தூர்: ஆத்தூர் ஒன்றிய கவுன்சில் கூட்டம் நேற்று, அ.தி.மு.க.,வை சேர்ந்த சேர்மன் லிங்கம்மாள் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

தி.மு.க., கவுன்சிலர் பத்மினிபிரியதர்ஷினி: நிதி ஒதுக்கீடு இல்லாததால், அடிப்படை வசதிகள் செய்ய முடியவில்லை. அப்பமசமுத்திரம், தென்னங்குடிபாளையத்தில் கிருமி நாசினி மருந்து தெளிக்கவில்லை.


அ.தி.மு.க., கவுன்சிலர் ரவிச்சந்திரன்: மல்லியக்கரையில், பொது கழிப்பிடம் கட்டும்படி பலமுறை மனு அளித்தும் பலனில்லை.


தி.மு.க., கவுன்சிலர்கள் கயல்விழி, பரமேஸ்வரி, சேகர், தனலட்சுமி மற்றும் அ.தி.மு.க., கவுன்சிலர் பன்னீர்செல்வம் ஆகியோரும், இதே கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.


சேர்மன் லிங்கம்மாள்: நிதி ஒதுக்கீடு வந்ததும், தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும்.


பி.டி.ஓ., சந்திரசேகரன் மற்றும் ஏ.பி.டி.ஓ., அருள்பாரதி: ஊரக வேலை திட்டப்பணிகளுக்கு மட்டுமே நிதி வருகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.

மதியம், 12:30 மணியளவில் கூட்டம் முடிந்ததாக கூறி, சேர்மன் சென்றார். இதையடுத்து, தி.மு.க., கவுன்சிலர் பத்மினிபிரியதர்ஷினி தலைமையில், ஆறு கவுன்சிலர்கள், நிதி ஒதுக்கீடுக்கு தீர்வு காணவேண்டும் எனக்கூறி, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், பி.டி.ஓ., சந்திரசேகரன் பேச்சுவார்த்தை நடத்தினார். தி.மு.க., கவுன்சிலர்கள், 'ஒரு வாரத்திற்குள் தீர்வு காணவேண்டும். இதே நிலை தொடர்ந்தால், பொதுமக்களை திரட்டி வந்து போராட்டம் நடத்துவோம். எங்கள் பதவிகளை ராஜினமா செய்துவிடுவோம்' என்றனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X