சேலம்: தீபாவளி பண்டிகைக்கு, சிறப்பு பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்த நிலையில், கொரோனாவால் பயணிகள் மத்தியில் வரவேற்பு குறைந்து, வருவாயில் சரிவு ஏற்பட்டு இருப்பது, அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பண்டிகை காலங்களில், சென்னையில் இருந்தும், தொழில் நகரங்களில் இருந்தும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, ஆண்டுதோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. 2019 தீபாவளி பண்டிகையின்போது, சென்னையில் இருந்து பயணிகளின் எண்ணிக்கை, எட்டு லட்சமாகவும், தொழில் நகர பயணிகளின் எண்ணிக்கை, 10 லட்சமாகவும் இருந்தது. நடப்பாண்டு கொரோனா பரவல் காரணமாக, நவ.,10ல் சிறப்பு பஸ்களின் இயக்கம் துவங்கிய போதும், பஸ்களில் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லை. சென்னையில் இருந்து ஐந்து லட்சம் பேரும், தொழில் நகர பயணிகளின் எண்ணிக்கை ஆறு லட்சமாகவும் சரிந்தது. கடந்த, 2018 தீபாவளியை முன்னிட்டு, 11 ஆயிரத்து, 503 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில், 113.12 கோடி ரூபாய் வருவாயும், 2019ல், 11 ஆயிரத்து, 288 பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில், 98.28 கோடி ரூபாய் வருவாயும் கிடைத்தது. நடப்பாண்டு, 14 ஆயிரத்து, 162 பஸ்கள் இயக்கப்பட்ட நிலையிலும், 82.12 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது. கொரோனாவால், சிறப்பு பஸ்களின் வருவாயில் சரிவு ஏற்பட்டு இருப்பது, அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE