சேலம்: சாலை வசதி கேட்டு, கலெக்டர் அலுவலகம் முன், போர்க்கொடி தூக்கிய பொதுமக்கள், அத்துமீறியதால், 49 பெண்கள் உள்பட, 127 பேரை கைது செய்தனர்.
ஓமலூர் அருகே, பச்சனம்பட்டி, கோலுக்காரனூர் கிராமத்தில், 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அவர்கள், 70 ஆண்டுகளாக தனியார் பட்டா நிலத்தை, வழித்தடமாக பயன்படுத்தி வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்த, வேறு சில பட்டாதாரர்கள், வழித்தடத்தை புனரமைக்க விடாமல் தடுத்து வருவதாக புகார் எழுந்தது. அதனால், சிரமத்துக்கு ஆளாவதாக கூறி, பாதிக்கப்பட்டவர்கள் மேட்டூர் ஆர்.டி.ஓ.,- ஓமலூர் தாசில்தாரிடம் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. இதை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று காலை, 11:40 மணியளவில் சேலம், நாட்டாண்மை கழக கட்டடம் முன் திரண்டனர். ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையை, ஒப்படைக்க போவதாக கூறி, கலெக்டர் அலுவலகத்தில், ஒட்டுமொத்தமாக நுழைய முயன்றனர். போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன். அறிவுரை வழங்கி, மனு அளிக்க ஐவரை அனுமதிப்பதாக கூறினார். அதை ஏற்க மறுத்து, சின்னப்பன் என்பவர் வாக்குவாதம் செய்து, பொதுமக்களுடன் முற்றுகையிட முயன்றார். தொடர்ந்து, போக்குவரத்துக்கு இடையூறு செய்து, அத்துமீறிய, 49 பெண்கள் உள்பட, 127 பேரை போலீசார் கைது செய்தனர். அதில், பெரும்பாலானோர் முக கவசம் அணியவில்லை. அவர்கள் மீது, தலா மூன்று பிரிவுகளின் கீழ், டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE