சேலம்: வனத்துறை சுற்றுலா தலங்களுக்கு, நாளை முதல், பயணிகள் வருகை தரலாம். ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு, இன்று, (டிச.,1) முதல், சுற்றுலா மையங்களை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில், வனத்துறைக்கு சொந்தமான, ஏற்காடு சூழல் சுற்றுலா பூங்கா, கரடியூர் காட்சிமுனை, ஆத்தூர் அருகே, ஆணைவாரி முட்டல் ஏரி என, மூன்று சுற்றுலா மையங்கள் உள்ளன. அவைகளுக்கு, பிரதி செவ்வாய் தோறும் வார விடுமுறை, நடைமுறையில் உள்ளது. எனவே, மூன்று சுற்றுலா மையங்களும், நாளை, (டிச.,2ல்,) திறக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள், வழக்கம் போல வருகை தந்து, குதூகலிக்கலாம் என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE