தர்மபுரி: அரசு உள் ஒதுக்கீட்டில், மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த, தர்மபுரியை சேர்ந்த, அரசு பள்ளி மாணவர்கள், 21 பேருக்கு, தர்மபுரி மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில், அமைச்சர் அன்பழகன், கல்வி உபகரணங்கள் மற்றும் நிதியுதவி வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: நடப்பாண்டில், 410க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இதன் மூலம், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளிகளில் படித்த, 21 மாணவர்கள், மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இவர்களின் கல்வி உதவிக்காக, சரஸ்வதி பச்சியப்பன் கல்வி அறக்கட்டளை சார்பில், முதலாமாண்டில் தலா, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அடுத்தடுத்த கல்வி ஆண்டுகளுக்கு, 20 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இந்த நிதியுதவியை பெறும் மாணவர்கள், சிறந்த முறையில் படித்து, தர்மபுரி மாவட்டத்துக்கு பெருமை சேர்த்து, பிற அரசு பள்ளி மாணவர்களுக்கு, முன்னுதாரணமாக திகழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், நகர செயலாளர் ரவி உட்பட, பலர் கலந்து கொண்டனர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE