தர்மபுரி: தர்மபுரியில், ரூ.80 லட்சம் மோசடி செய்த, தனியார் நிதி நிறுவன நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தர்மபுரி எஸ்.பி., அலுவலகத்தில், பாதிக்கப்பட்டோர் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: தர்மபுரி, அரசு மருத்துவக்கல்லூரி முன், 'கே.எம்.ஜெ., லேண்ட் டெவலப்பர் இந்தியா' என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அவர்கள், பல்வேறு கிளை நிர்வாகிகள் மற்றும் சீனியர் ஏஜண்டுகளை நியமித்து, மாவட்டத்தின், பல்வேறு பகுதி மக்களிடம், மாதம், 200 முதல், 1,100 ரூபாய் வரை, கடந்த பல ஆண்டுகளாக வசூல் செய்து வருகின்றனர். இதில், 185 பேருக்கு, தற்போது முதிர்வு தொகையாக, 80 லட்ச ரூபாய் தரவேண்டி உள்ளது. இத்தொகைக்கு பணம் செலுத்தியவர்களிடம் இருந்து, பணம் செலுத்தியதற்கான அசல் ஆவணங்களை பெற்றுக்கொண்ட நிர்வாகிகள், முதிர்வு தொகையை தராமல் ஏமாற்றி வருகின்றனர். எனவே, அந்த நிதி நிறுவனத்தினர் மீது, உரிய நடவடிக்கை எடுத்து, அவர்களிடமிருந்து, எங்கள் பணத்தை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE