சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாமனாரை கொன்ற மருமகன் உள்பட 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

Added : டிச 01, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: மாமனாரை கொன்ற மருமகன் உள்பட இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, கிருஷ்ணகிரி கோர்ட் தீர்ப்பளித்தது.தர்மபுரி மாவட்டம், அரூர், வெங்கடராமபுரத்தை சேர்ந்தவர் மகாதேவன், 28; இவரது மனைவி அலமேலு. தம்பதிக்குள் குடும்ப பிரச்னை இருந்தது. மேலும், மனைவியின் நடத்தையில் மகாதேவன் சந்தேகப்பட்டு வந்தார். இதனால், அலமேலு கோபித்து கொண்டு, கிருஷ்ணகிரி மாவட்டம்,

கிருஷ்ணகிரி: மாமனாரை கொன்ற மருமகன் உள்பட இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, கிருஷ்ணகிரி கோர்ட் தீர்ப்பளித்தது.


தர்மபுரி மாவட்டம், அரூர், வெங்கடராமபுரத்தை சேர்ந்தவர் மகாதேவன், 28; இவரது மனைவி அலமேலு. தம்பதிக்குள் குடும்ப பிரச்னை இருந்தது. மேலும், மனைவியின் நடத்தையில் மகாதேவன் சந்தேகப்பட்டு வந்தார். இதனால், அலமேலு கோபித்து கொண்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், வெங்கடாபுரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். பின், ஊத்தங்கரை நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு, வழக்கு தொடர்ந்தார். இதனால், அலமேலு மற்றும் அவரது தந்தை சுப்ரமணி, 57, மீது, மகாதேவன் ஆத்திரமடைந்தார். கடந்த, 2015 ஆக., 13ல் வீட்டில் தனியாக இருந்த சுப்பிரமணியை, மகாதேவன் மற்றும் வெங்கடாபுரத்தை சேர்ந்த மாரியப்பன், 28 ஆகியோர், இரும்பு கம்பியால் குத்தி கொலை செய்தனர். சிங்காரப்பேட்டை போலீசார் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு, கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி, குற்றம் சாட்டப்பட்ட மகாதேவன் மற்றும் மாரியப்பனுக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனையும், தலா, 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், கட்ட தவறினால் மேலும், 6 மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் பாஸ்கர் ஆஜரானார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X