சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர்

Added : டிச 01, 2020
Share
Advertisement
ஓசூர்: பாகலூர் அருகே, வீட்டின் படுக்கையில் மர்மமாக இறந்து கிடந்த வாலிபர் சடலத்தை மீட்ட போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாகலூர் அருகே, பெரியதாசரப்பள்ளி தின்னாவை சேர்ந்தவர் தேவராஜ், 25. கூலித்தொழிலாளி; இவரது பெற்றோர் கோவிலுக்கு சென்று விட்டதால், தேவராஜ் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று மதியம், வீட்டின் படுக்கையில், மர்மமான முறையில் தேவராஜ் இறந்து கிடந்தார்.

ஓசூர்: பாகலூர் அருகே, வீட்டின் படுக்கையில் மர்மமாக இறந்து கிடந்த வாலிபர் சடலத்தை மீட்ட போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாகலூர் அருகே, பெரியதாசரப்பள்ளி தின்னாவை சேர்ந்தவர் தேவராஜ், 25. கூலித்தொழிலாளி; இவரது பெற்றோர் கோவிலுக்கு சென்று விட்டதால், தேவராஜ் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று மதியம், வீட்டின் படுக்கையில், மர்மமான முறையில் தேவராஜ் இறந்து கிடந்தார். இதனால் அவர், கொலை செய்யப்பட்டதாக, முதலில் தகவல் பரவியது. இதையடுத்து, பாகலூர் போலீசார் சடலத்தை மீட்டு, விசாரணை நடத்தினர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான தேவராஜ், வீட்டில் தனியாக இருந்ததால், உறவினர் ஒருவர், அவருக்கு நேற்று சாப்பாடு வழங்கி உள்ளார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில், தேவராஜ் வாந்தி எடுத்துள்ளார். அதன் பின் படுக்கையிலேயே அவர் உயிரிழந்தது தெரிந்தது. அவரது உடலில் காயங்கள் ஏதும் இல்லாததால், கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும், அதிக போதையில் இருந்ததால், உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாகவும், பாகலூர் போலீசார் தெரிவித்தனர். பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X