பொது செய்தி

தமிழ்நாடு

சட்ட விரோத வீட்டுமனை விற்பனை: எம்.எல்.ஏ., புகார்

Added : டிச 01, 2020
Share
Advertisement
ஈரோடு: பெருந்துறை பகுதியில் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை, அ.தி.மு.க., கரை வேட்டி கட்டிய சிலர் விற்பனை செய்வதாக, எம்.எல்.ஏ., வெங்கடாசலம் புகார் தெரிவித்தார்.ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், நேற்று அவர் கூறியதாவது: பெருந்துறை நகரை சுற்றி, விஜயமங்கலம், சென்னிமலை பகுதியில் ஆயிரக்கணக்கான வீட்டுமனை பிரிவுகள் அங்கீகரிக்கப்படாமல் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு, 500

ஈரோடு: பெருந்துறை பகுதியில் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை, அ.தி.மு.க., கரை வேட்டி கட்டிய சிலர் விற்பனை செய்வதாக, எம்.எல்.ஏ., வெங்கடாசலம் புகார் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், நேற்று அவர் கூறியதாவது: பெருந்துறை நகரை சுற்றி, விஜயமங்கலம், சென்னிமலை பகுதியில் ஆயிரக்கணக்கான வீட்டுமனை பிரிவுகள் அங்கீகரிக்கப்படாமல் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு, 500 கோடி ரூபாய்க்கு மேலாகும். இதற்கு அரசு அதிகாரிகள் உடந்தை. அ.தி.மு.க., கரை வேட்டி கட்டிய, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், இதை செய்வதால், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி, ஓடை புறம்போக்கில் வீடு கட்டக்கூடாது. திங்களூர் பகுதியில் ஆறு ஏக்கரில் ஓடை புறம்போக்கை ஒட்டி, அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டவர், கட்டடம் கட்டி உள்ளார். விவசாயிகள் கொடுத்த புகாரால், தாசில்தார், ஆர்.டி.ஓ., - டி.ஆர்.ஓ., விசாரித்து அகற்ற உத்தரவிட்டனர். இதுவரை அகற்றவில்லை. தேர்தல் நேரத்தில் இதுபோன்ற சில நபர்கள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X