பொது செய்தி

தமிழ்நாடு

சி.இ.ஓ.,வை அவதூறாக பேசிய பட்டதாரி ஆசிரியர் இடமாற்றம்

Added : டிச 01, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: சி.இ.ஓ.,வை அவதூறாக பேசிய, பட்டதாரி ஆசிரியரை இடமாற்றம் செய்து, சி.இ.ஓ., உத்தரவிட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், நெடுமருதி அரசு உயர்நிலைப் பள்ளியில், கணித பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அருண். அப்பள்ளி தலைமை ஆசிரியர் மருத்துவ விடுப்பில் இருந்தபோது, இவர், பொறுப்பு தலைமை ஆசிரியராக இருந்தார். கடந்த, 26ல் பள்ளியில் நடந்த ஆசிரியர்கள் கூட்டத்தில், சி.இ.ஓ., முருகனை

கிருஷ்ணகிரி: சி.இ.ஓ.,வை அவதூறாக பேசிய, பட்டதாரி ஆசிரியரை இடமாற்றம் செய்து, சி.இ.ஓ., உத்தரவிட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், நெடுமருதி அரசு உயர்நிலைப் பள்ளியில், கணித பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அருண். அப்பள்ளி தலைமை ஆசிரியர் மருத்துவ விடுப்பில் இருந்தபோது, இவர், பொறுப்பு தலைமை ஆசிரியராக இருந்தார். கடந்த, 26ல் பள்ளியில் நடந்த ஆசிரியர்கள் கூட்டத்தில், சி.இ.ஓ., முருகனை அவதூறாக பேசியுள்ளார். இதையறிந்த சி.இ.ஓ., பள்ளி ஆசிரியர்களிடம் கடந்த, 27ல் விசாரணை நடத்தினார். அவர்கள் கூறியதை எழுத்து பூர்வமாக எழுதி வாங்கிய பின், ஆசிரியர் அருணிடம் விசாரித்தார். தான் தவறாக பேசியதை அவர் ஒப்புக்கொண்டார். இச்செயல், தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகளின்படி, உயர் அலுவலரை அவதூறாக பேசி, ஆசிரியர் பணிக்கு களங்கம் ஏற்படுத்தியதாகும். இதற்காக, ஆசிரியர் அருணை தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்து, சி.இ.ஓ., உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X