பொது செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் பாய்ந்ததில் கையை இழந்த மாணவி; சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிப்பு

Added : டிச 01, 2020
Share
Advertisement
பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவி மின்சாரம் பாய்ந்ததில் பாதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள பொருளாதார வசதியின்றி குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் டி.வி.எஸ்., மேடு பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன், 47; தறி தொழிலாளி. இவரது மனைவி வித்யா, 42. மகள் ?ஹமா, 21; பொறியியல் மாணவி. மகன் ஜெகதீசன், 19. கடந்த, 14ல்

பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவி மின்சாரம் பாய்ந்ததில் பாதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள பொருளாதார வசதியின்றி குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.


நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் டி.வி.எஸ்., மேடு பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன், 47; தறி தொழிலாளி. இவரது மனைவி வித்யா, 42. மகள் ?ஹமா, 21; பொறியியல் மாணவி. மகன் ஜெகதீசன், 19. கடந்த, 14ல் அருகிலுள்ள ஆண்டிக்காடு பகுதியில் உள்ள பாட்டி வீட்டிற்கு ?ஹமா சென்றுள்ளார். மாடியில் மொபைல்போன் பேசிக் கொண்டிருக்கும் போது, மின் ஒயர் அறுந்து விழுந்ததில், அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், அவரது இடது கை, வயிறு ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டன. கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது இடது கையில் முழங்கையளவு எடுத்து விட்டனர். இதுவரை மூன்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது, அவரது சிகிச்சைக்கு கூடுதலாக செலவாவதால், பொருளாதார வசதியின்றி குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, தியாகராஜன் கூறியதாவது: மருத்துவமனையில் அதிக நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. ஏழு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிலர் செய்த உதவி தான், தற்போது வரை சிகிச்சைக்கு உதவியாக உள்ளது. தறி தொழில் செய்து வரும் நான், தொடர்ந்து செலவு செய்ய முடியாத நிலையில் உள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார். அவருக்கு உதவ விரும்புவர்கள், 85265 55652 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X