பொது செய்தி

தமிழ்நாடு

உண்ணாவிரதமிருக்கும் முருகனிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை

Added : டிச 01, 2020
Share
Advertisement
வேலூர்: வேலூர் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் ராஜிவ் கொலையாளி முருகனிடம், சிறை அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், வேலூர், மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த, 22ல் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருவதாக, அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இது குறித்து, சிறை அதிகாரிகள்

வேலூர்: வேலூர் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் ராஜிவ் கொலையாளி முருகனிடம், சிறை அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், வேலூர், மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த, 22ல் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருவதாக, அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இது குறித்து, சிறை அதிகாரிகள் கூறியதாவது: லண்டனில் உள்ள முருகனின் மகள் அரித்திரா மற்றும் வேலூர், சென்னை மற்றும் இலங்கையில் உள்ள உறவினர்களிடம், மொபைல்போன் வீடியோ காலில் பேச, முருகன் அனுமதி கேட்டுள்ளார். அதற்கு, சிறை நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டது. இதனால், தன்னை விடுதலை செய்யுங்கள் அல்லது ஜீவசமாதி அடைய அனுமதிக்கும் படி, மனு கொடுத்துள்ளார். உயர் அதிகாரிகளுக்கு, இந்த மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் வரவில்லை. இதனால் அவர், கடந்த, 22ல் இருந்து, ஒன்பது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். சிறையில் தரப்படும் உணவுகளை சாப்பிட மறுத்து வருகிறார். பழம் சாப்பிடுகிறார்; தண்ணீர் குடிக்கிறார். சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துள்ளார். அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X