மும்பை: பிரிட்டனில், சினிமா மற்றும் தொலைக்காட்சித் துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களை ஊக்குவிக்க, பி.ஏ.எப்.டி.ஏ., எனப்படும், 'பிரிட்டிஷ் அகாடமி ஆப் பில்ம் அண்டு டெலிவிஷன் ஆர்ட்ஸ்' என்ற தொண்டு அமைப்பு இயங்கி வருகிறது.இந்த அமைப்பு, சிறந்த கலைஞர்களை தேர்வு செய்து, ஒவ்வொரு ஆண்டும் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்நிலையில், இந்த தொண்டு நிறுவனத்தின் துாதராக, பிரபல இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான், 53, நியமிக்கப்பட்டுள்ளார். திறமைகளை கண்டறிந்து, உலகிற்கு அறிமுகம் செய்யும் வகையில், இவரின் பங்கு இருக்கும் எனக் கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE