பொது செய்தி

தமிழ்நாடு

பணி நிரந்தரம் கோரி ஆசிரியர்கள் மனு

Added : டிச 01, 2020
Share
Advertisement
கரூர்: 'பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என, கரூர் கலெக்டர் அலுவலகத்தில், பகுதி நேர ஆசிரியர்கள் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: கடந்த, 2011 முதல் அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், தோட்டக்கலை, கட்டட கலை ஆகிய ஆசிரியர் பணிகளுக்கு, 5,000 ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையில், பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டோம். கடந்த, ஒன்பது ஆண்டுகளில், இரண்டு முறை மட்டும் ஊதிய

கரூர்: 'பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என, கரூர் கலெக்டர் அலுவலகத்தில், பகுதி நேர ஆசிரியர்கள் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: கடந்த, 2011 முதல் அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், தோட்டக்கலை, கட்டட கலை ஆகிய ஆசிரியர் பணிகளுக்கு, 5,000 ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையில், பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டோம். கடந்த, ஒன்பது ஆண்டுகளில், இரண்டு முறை மட்டும் ஊதிய உயர்வு அளிக்கப்பட்ட நிலையில், தற்போது, 7,700 ரூபாய் பெற்று வருகிறோம். மேலும், கோடை விடுமுறையான மே மாதம் ஊதியம் கிடையாது. வேலை நிறுத்த காலத்தில் கூட அரசு உத்தரவை ஏற்று பணி செய்கிறோம். பல்வேறு துறைகளில் பகுதி நேர பணியாளர்கள், நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது, 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X