கரூர்: கரூர் மாவட்டம், வேடிச்சி பாளையம், சோமூரில், தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதியின் பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான செந்தில்பாலாஜி பேசியதாவது: கொரோனா நோய் தொற்று காலத்தில் மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கைகளால், தமிழகத்தில், இரண்டு கோடி இளைஞர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். வாங்கல் பகுதியில் சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணி கிடப்பிலுள்ளது. நெரூர் -உன்னியூர் பாலம் திட்டம் கிடப்பில் உள்ளது. இதுபோல, கோயம்பள்ளி மேலப்பாளையம் இடையே அமராவதி ஆற்றில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளும் முடிவடையாமல் உள்ளன. இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் மாட்டு வண்டித் தொழிலாளர்களுக்கு ஆற்றில் மணல் அள்ள அனுமதி உள்ளது. ஆனால், கரூரில் மட்டும் அனுமதி கிடையாது. நீதிமன்றத்தை நாடி, நிச்சயம் மணல் அள்ளுவதற்கு அனுமதி பெற்று தரப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE