கரூர்: ஆசிரியர் பணி வழங்க கோரி, 2013ல் 'டெட்' தேர்ச்சி பெற்றவர்கள், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: கடந்த, 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, ஏழு ஆண்டுகளாக பணிக்காக காத்திருக்கிறோம். நடப்பு ஆண்டில், அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது. இதற்கு தேவையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இது மட்டுமல்லாது அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் அதிகபட்ச வயது, 40 என்பதை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில், இந்த அரசாணை ஏற்கனவே தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பொருந்தாது என்று அறிவிக்க வேண்டும். மேலும், ஏழு ஆண்டுகளாக தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த பணியிடங்களுக்கு, 2013ல் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE