'விவசாயிகளுக்கான உரிமையை வழங்குங்கள்': ராகுல் வலியுறுத்தல்

Updated : டிச 01, 2020 | Added : டிச 01, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
புதுடில்லி: டில்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கான உரிமையை மத்திய அரசு வழங்கவேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் வலியுறுத்தியுள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 6 நாட்களாக விவசாய அமைப்புகளைச் சேர்ந்த விவசாயிகள் டில்லியில் போராடி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து வரும் காங்கிரஸ்
Rahul, Farmers, CentralGovt, ராகுல், விவசாயிகள்

புதுடில்லி: டில்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கான உரிமையை மத்திய அரசு வழங்கவேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 6 நாட்களாக விவசாய அமைப்புகளைச் சேர்ந்த விவசாயிகள் டில்லியில் போராடி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து வரும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி., ராகுல் விவசாயிகளை மத்திய அரசு தவறாக நடத்தக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.


latest tamil news


இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் பதிவிட்டுள்ளதாவது: விவசாயிகளின் கடின உழைப்பிற்கு நாம் அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம். லத்தி குச்சிகள் மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகள் மூலம் விவசாயிகளை தவறாக நடத்தக் கூடாது. விவசாயிகளுக்கான நீதி மற்றும் உரிமைகளை வழங்குவதே நாம் பட்ட கடனை ஈடுகட்டும். மத்திய அரசு விழித்து விவசாயிகளுக்கான உரிமையை உறுதி செய்யவேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sowdarpatti Rayarpadi Ramaswamy - Madurai,இந்தியா
01-டிச-202021:39:50 IST Report Abuse
Sowdarpatti Rayarpadi Ramaswamy விவசாயிகளுக்கான உரிமையை மத்திய அரசு வழங்கியுள்ளது யாரிடம் வேண்டுமானாலும் நல்ல விலையில் விற்கலாம்.நம்மூர் உளறல் மன்னன் கமல் போல் பப்பு ஏதோ பிதற்றிக்கொண்டிருக்கிறார். சட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் விளைச்சலை நேரடிடியாக சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்ல வழி செய்திருக்கிறார்கள். முதலில் காங்கிரஸ் கட்சியில் குடும்பம் வழிவிட்டு பொது ஜனங்களுக்கான தலைமை உரிமையை கொடு ... என்ன பப்பு
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
01-டிச-202020:42:17 IST Report Abuse
Ramesh Sargam விவசாயிகளை முன்னிறுத்தி அரசியல் செய்வது மிகவும் கேவலமான செயல். விவசாயிகளை அவர்கள் போக்கில் விட்டுவிடுங்கள். அவர்களை உங்கள் சாக்கடை அரசியலுக்காக பயன்படுத்தாதீர்கள்.
Rate this:
Cancel
01-டிச-202017:55:21 IST Report Abuse
இராமன் பப்புவுக்கு இதனால நல்ல பேட்டா போல இருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X