சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பட்டதாரி பெண் காரில் கடத்தல்: வாலிபர் கைது: மூவர் தலைமறைவு

Added : டிச 01, 2020
Share
Advertisement
குளித்தலை: குளித்தலையில் தனியார் நிதி நிறுவன பெண் பணியாளரை காரில் கடத்திய வழக்கில், வாலிபர் கைது செய்யப்பட்டார்.குளித்தலை அடுத்த, வைகைநல்லூர் பஞ்.. கோட்டைமேடு கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகள் பானுமதி, 22; பி.சி.ஏ., பட்டதாரி. பெரியபாலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரிகிறார். நேற்று காலை, 9:00 மணியளவில் ஹோண்டா ஆக்டிவா மொபட்டில் குளித்தலை நோக்கி

குளித்தலை: குளித்தலையில் தனியார் நிதி நிறுவன பெண் பணியாளரை காரில் கடத்திய வழக்கில், வாலிபர் கைது செய்யப்பட்டார்.


குளித்தலை அடுத்த, வைகைநல்லூர் பஞ்.. கோட்டைமேடு கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகள் பானுமதி, 22; பி.சி.ஏ., பட்டதாரி. பெரியபாலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரிகிறார். நேற்று காலை, 9:00 மணியளவில் ஹோண்டா ஆக்டிவா மொபட்டில் குளித்தலை நோக்கி செல்லும் போது, வாலாந்தூர் பிரிவு சாலை, தனியார் திருமண மண்டபம் அருகே, அதே பகுதியை சேர்ந்த, செந்தில்குமார் மகன்கன் அரவிந்தன், அருண்; வைரமுத்து மகன்கள் ராசு, 24, ராஜலிங்கம் ஆகியோர், வழிமறித்து மாருதி காரில் கடத்தி சென்றனர். அய்யர்மலை வழியாக நங்கவரம் கடத்திச் செல்வதாக, குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின் தொடர்ந்து சென்ற போலீசாரை பார்த்தவுடன் நால்வரும் பெண்ணை விட்டு விட்டு ஓடி விட்டனர். இதில், விவசாய கூலித்தொழிலாளியான ராசுவை கைது செய்தனர். மற்ற மூவரையும் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X