வெண்ணந்தூர்: வெண்ணந்தூர் பகுதி யில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டத்தின் கீழ், பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு தொடங்கியது. 2020 நவம்பர், 25ம் தேதி முதல், டிசம்பர் மாதம் வரை இப்பணி நடக்கவுள்ளது. வெண்ணந்தூர் ஒன்றியத்தில், 132 குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இதில், ஆறு முதல், 14 வயது வரை உள்ள பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளையும், 0-18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளும் கண்டறியப்படவுள்ளது. அவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இக்கணக்கெடுப்பு கட்டட பணி நடக்கும் இடங்கள், கல்குவாரி, செங்கல் சூளை, அரிசி ஆலைகள், விவசாய பணிகள் நடைபெறும் பகுதி ஆகிய இடங்களில் நடந்தன. வட்டார கல்வி அலுவலர் பழனியம்மாள், மேற்பார்வையாளர் மலர்கொடி, ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE