நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் மெகராஜ் விடுத்துள்ள அறிக்கை: மகளிருக்கான சுகாதாரம், ஆற்றுப்படுத்துதல், சட்ட உதவி, விழிப்புணர்வு, கல்வி, பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் குறிப்பிட்ட பங்களிப்பு, பெண்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகள், வன்முறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாகுபாடு, துன்புறுத்துதல், பெண் குழந்தை பாலின விகிதத்தில் முன்னேற்றம் போன்றவற்றில், தலைசிறந்த பங்களிப்பு சேவை புரிந்த பெண்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் வகையில், 'மகளிர் சக்தி விருது' என்ற, தேசிய விருது வழங்கப்படுகிறது. தனிப்பட்ட நபர்களுக்கான விருதுக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். நிறுவனங்களுக்கான விருதுக்கு, இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். தேசிய விருதுக்கான வழிகாட்டு நெறிமுறைகள், www.narishaktipuraskar.wcd.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. தகுதிவாய்ந்த தனிநபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள், வரும் ஜன., 7 க்குள், இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு, மாவட்ட சமூகநல அலுவலர், அறை எண்.19, கலெக்டர் அலுவலகம், நாமக்கல் என்ற முகவரியிலோ, 04286- 280230 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE