நாமக்கல்: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில், காணொலி காட்சி மூலம் நடந்தது. கலெக்டர் மெகராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில், விவசாய சங்க பிரதிநிதிகள், அனைத்து துறை அலுலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். மோகனூர் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில், பல்வேறு விவசாயிகள் கலந்து கொண்டு, தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
விவசாயிகள் நலச்சங்க மாநிலத் தலைவர் பாலசுப்ரமணியம் பேசியதாவது: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த விவசாயிக்கு, ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு, கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. அதனால், அவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். அவர்களுக்கு, இடைக்கால நிவாரணமாக, 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். கடும் வறட்சியால், பயிர்கள் காய்ந்து, விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ளனர். இந்நிலையில், வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதனால், கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE