குமாரபாளையம்: குமாரபாளையம் நகராட்சி சார்பில், மலேரியா பணியாளருக்கு பிரிவு உபசார விழா நடந்தது. குமாரபாளையம் நகராட்சியில் மலேரியா பணியாளராக செல்வராஜ், 58, என்பவர் 1991 முதல், 2008 வரை தொகுப்பூதிய பணியாளராகவும், அதன்பின், 12 ஆண்டுகள் நிரந்தர பணியாளராகவும் பணியாற்றி வந்தார். நேற்று பணி ஓய்வு பெற்றார். இவருக்கு நகராட்சி அலுவலக வளாகத்தில் ஆணையர் ஸ்டான்லிபாபு தலைமையில் பிரிவு உபசார விழா நடந்தது. அவரது சேவையை பாராட்டி மாலை, பொன்னாடை அணிவிக்கப்பட்டு, பணி ஓய்வு ஆணை, விடுப்பு தொகைக்கான காசோலை ஆகியன வழங்கப்பட்டன. பொறியாளர் சுகுமார், மேலாளர் குமரேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE