நாமக்கல்: நாமக்கல் அருகே பருத்தி பேல் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. கர்நாடகா மாநிலம் மைசூருவிலிருந்து, 18 டன் எடையளவில் பருத்தி பேல் லோடு ஏற்றிக்கொண்டு சாத்தூருக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது அதை, டிரைவர் ஜீனத் குமார், 25, என்பவர் ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை, 5:00 மணியளவில், நாமக்கல் அருகே உள்ள புதன் சந்தை, தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, அங்கு இருந்த தடுப்புச்சுவரில் மோதி, சர்வீஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE