பொது செய்தி

இந்தியா

டில்லியில் விவசாயிகள் போராட்டம்; கனடா பிரதமர் ஆதரவு

Updated : டிச 01, 2020 | Added : டிச 01, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement
புதுடில்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்துள்ளார்.மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லியில் கடந்த 6 நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் இந்தப் போராட்டம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் காணொலி வாயிலாக
CanadaPM, JustinTrudeau, FarmersProtest, AlwaysDefund, RightsOfPeaceful, Protest, கனடா, பிரதமர், ஜஸ்டின் ட்ரூடோ, விவசாயிகள், போராட்டம்,

புதுடில்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லியில் கடந்த 6 நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் இந்தப் போராட்டம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் காணொலி வாயிலாக குருநானக் ஜெயந்தி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.


latest tamil news


இந்தியாவில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் பற்றி செய்திகள் வெளிவருகின்றன. நிலைமை கவலை அளிக்கும் அம்சமாக உள்ளது. அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க கனடா எப்போதும் துணை நிற்கும். போராடும் விவசாயிகள் குறித்த எங்கள் கவலைகள் இந்திய அரசுக்கு பல வழிகளில் தெரிவித்துள்ளோம். அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டிய நேரம் இது. இந்தியாவில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை கவனிக்காவிட்டால் நான் கடமை தவறியவனாவேன். இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள ஒரே வெளிநாட்டு தலைவர் ஜஸ்டின்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
01-டிச-202022:56:38 IST Report Abuse
Vijay D Ratnam அதிகப்பிரசங்கித்தனம் என்பது இதுதான். ஒவ்வொரு நாட்டிலும் இப்படி பல பிரச்சினைகள் உண்டு. வாய் இருக்கேன்னு எல்லாத்துக்கும் கமெண்ட்ஸ் கொடுக்க கூடாது.
Rate this:
Cancel
BALU - HOSUR,இந்தியா
01-டிச-202017:54:56 IST Report Abuse
BALU கனடா பிரதமர் கருணாநிதியின் அரசியல் வாரிசாகிவிட்டார். கருணாநிதிதான் தனக்கு சிறிதும் சம்பந்தமில்லாத உலக நிகழ்வுகளுக்கெல்லாம் அவர் வைத்திருந்த கைத்தடி மீடியாக்களில் கருத்து சொல்லி கருத்து கண்ணாயிரமாக வலம் வந்தார் அந்த வெற்றிடத்தை கனடா பிரதமர் நிரப்பி விட்டார் கனடா பிரதமர் தனது பதவிக்கான மரியாதையை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் இல்லையேல் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி கனடாவின் மரியாதை கெட்டுப் போகிவிடும்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
01-டிச-202016:46:07 IST Report Abuse
sankaseshan Canadian leader is against the present government of Modiji . Knowing fully well about this attitude PM did not receive him in airport . He is a supporter of kalistanis a militant organisation . Srilankan Tamils do not back kalistan . Karthikai Deepam festival is celebrated by Sikhs as it coincides with Gurunanak Jayanthi .Why this fellow should interfere with India,s internal problems ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X