இது தான் மாற்றம், முன்னேற்றமா...? : டிரெண்டிங்கில் பா.ம.க.வுக்கு கேள்வி

Updated : டிச 01, 2020 | Added : டிச 01, 2020 | கருத்துகள் (42) | |
Advertisement
சென்னை : மாற்றம், முன்னேற்றம் என முழங்குகிறார் பா.ம.க,வின் அன்புமணி, ஆனால் அவரது ஆதரவாளர்களோ போராட்டம் என்ற பெயரில் ரயில் மீது கல்லெறிதல் போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதுதான் உங்கள் மாற்றம், முன்னேற்றமா என சமூகவலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். வன்னியர் சமூகத்திற்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி

சென்னை : மாற்றம், முன்னேற்றம் என முழங்குகிறார் பா.ம.க,வின் அன்புமணி, ஆனால் அவரது ஆதரவாளர்களோ போராட்டம் என்ற பெயரில் ரயில் மீது கல்லெறிதல் போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதுதான் உங்கள் மாற்றம், முன்னேற்றமா என சமூகவலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.latest tamil news


10 கிமீ தூரத்துக்கு டிராபிக் ஜாம்


வன்னியர் சமூகத்திற்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பா.ம.க.,வினர் சென்னையில் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். இதற்காக தமிழகத்தின் வெவ்வேறு ஊர்களில் இருந்து பா.ம.க.வின் சென்னை நோக்கி பயணித்தனர். ஆனால் அவர்கள் பெரும்பாலும் சென்னைக்கு முன்பே பெருங்களத்தூரில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து டுவிட்டரில் #இடப்பங்கீடுபோராட்டம் என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனது. அந்த சமூகத்தை பலரும் எங்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வேண்டும் என காலை முதலே பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு டிரெண்ட் செய்தனர்.
அதேசமயம் போராட்டம் என்ற பெயரில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. குறிப்பாக பா.ம.க.,வினர், ரயிலை மறித்து அவற்றின் மீது கற்களை வீசி எறிவதும், ரயில் நின்ற பின்பும் கற்களை தூக்கி தாக்கும் வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரல் ஆனது. இதை சுட்டிக்காட்டியும், இன்னும் பிற அசம்பாவித சம்பவங்களை சுட்டிக்காட்டியும் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


latest tamil newsபெருங்களத்தூரில் பல மணிநேர போக்குவரத்து நெரிசலால் பலர் கடும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதுபோன்ற சம்பவங்களை சுட்டிக்காட்டியும், வன்முறையை பா.ம.க, தூண்டி வருகிறது என குற்றம் சாட்டியும் டுவிட்டரில் பா.ம.க,வை தடை செய்ய வேண்டும் என்ற ஹேஷ்டாக்கும் டிரெண்ட் ஆனது. அதில் பெரும்பாலும் பா.ம.க,வின் அன்புமணி, ''மாற்றம் முன்னேற்றம்'' என கொள்கையை முன்வைத்து முழங்குகிறார்.
இதுதான் உங்களின் மாற்றம், முன்னேற்றமா என கேள்வி எழுப்பினர். இதனால் இடஒதுக்கீடு தொடர்பாக டுவிட்டரில் ஆதரவாக #இடப்பங்கீடுபோராட்டம் என்ற ஹேஷ்டாக்கும், எதிராக #BanPMK என்ற ஹேஷ்டாக்கும் டிரெண்ட் ஆகின.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
03-டிச-202016:59:49 IST Report Abuse
ponssasi முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இவர்களின் சாலை மறியல் போராட்டத்தால் சிறுவர்களான நாங்கள் எனது தாயாருடன் சிதம்பரம் அருகில் ஒருகிராமத்தில் நாங்கள் சென்ற பேருந்து தடுத்து நிறுத்தப்பட்டது. குடிநீரோ, உணவோ இல்லை, அது ஒரு மோசமான நிலை. இப்போதுபோல தொலைத்தொடர்பு வசதிகள் இல்லை. காலை பத்து மணிக்கெல்லாம் வீட்டிற்கு சென்று விடலாம் என்று நினைத்தது. மாலை ஆறு மணிக்குமேல் பஸ் புறப்பட அனுமதித்தனர், இரவு மணி தெரியவில்லை எனது தாயார் எங்களை பாட்டி வீட்டிற்கு கொண்டுசேர்த்தார். அன்று முதல் ப மா கா என்றால் எங்களுக்கு அவ்வளவு எரிச்சல் வரும். ப மா க யாருடன் கூட்டணி வைத்தாலும் அந்த கூட்டணிக்கு நாங்கள் வாக்களிப்பதில்லை. அன்புமணி வந்தபின் கொஞ்சம் நிலைமை மாறியது போல தோன்றியது. இந்த நிலை தொடர்ந்தாள் அன்புமணி வார்டு மெம்பெர் கூட ஆகமுடியாது.
Rate this:
Cancel
Thangaraj S - Pattabiram, Chennai,இந்தியா
02-டிச-202009:16:11 IST Report Abuse
Thangaraj S கருணாநிதி 1989 ல் செய்த தவறை போல பழனிசாமி இப்பொழுது செய்ய மாட்டார். அவர்களுக்கு தனி இடவொதுக்கீடு கொடுத்தாலும் ADMK விற்கு எந்த லாபமும் இருக்காது (பா ம க விற்குத்தான் லாபம்). மாறாக பிற ஜாதியின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டி வரும்.
Rate this:
Cancel
Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா
02-டிச-202005:39:32 IST Report Abuse
Bharathi சுடலை கிட்ட இருந்து ஒரு சின்ன கண்டனம் கூட வரலையே? ஏன், வீரவசனம் பேசுன மந்திரி செயகுமாரு கூட வாயே திறக்கலை?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X