சென்னை: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளதால், புயலை கண்டு பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இலங்கை அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை காலை புயலாக வலுப்பெறுகிறது. இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில், இன்று கன மழை பெய்யும்; தென் மாவட்டங்களில், நாளை அதி கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனை தொடர்ந்து புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

இதன்பின்னர் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுவதால், புயலை கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை. டிச.,4 ம் தேதி வரை அதிகனமழை இருக்கும் என்பதால், தென்மாவட்ட மக்கள் வெளியே வர வேண்டாம். அண்டை மாநில கடற்பகுதிக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள், அந்தந்த மாநில கரைபகுதிக்கு திரும்புங்கள். ரேசன்கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை நீர்படாத இடத்தில் வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மற்றும் வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று (01.12.2020) தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டேன். pic.twitter.com/IfrsLBiYUr
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) December 1, 2020
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE