பா.ஜ. தலைவர் மீது பெண் பாலியல் புகார் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ. தலைவர் மீது பெண் பாலியல் புகார்

Added : டிச 01, 2020
Share
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட பா.ஜ. தலைவர் மீது பெண் பாலியல் புகார் அளித்துள்ளார்.விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் 37 வயது பெண் அளித்த மனு:நான் விழுப்புரம் மாவட்ட பா.ஜ. மகளிர் அணி பொதுச்செயலராக உள்ளேன். முன்னாள் எம்.எல்.ஏ.வும் பா.ஜ. மாவட்ட தலைவருமான கலிவரதன், பா.ஜ.வில் கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிரணி பொதுச்செயலர் பதவி வாங்கி தருவதாக கூறினார். பதவி வேண்டாம் என்றேன். அவர்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட பா.ஜ. தலைவர் மீது பெண் பாலியல் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் 37 வயது பெண் அளித்த மனு:
நான் விழுப்புரம் மாவட்ட பா.ஜ. மகளிர் அணி பொதுச்செயலராக உள்ளேன். முன்னாள் எம்.எல்.ஏ.வும் பா.ஜ. மாவட்ட தலைவருமான கலிவரதன், பா.ஜ.வில் கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிரணி பொதுச்செயலர் பதவி வாங்கி தருவதாக கூறினார். பதவி வேண்டாம் என்றேன். அவர் கேட்டதால் கட்சிக்கு செலவு செய்ய ரூ.5 லட்சம் கடன் வாங்கி கொடுத்தேன். முடக்குவாதத்தால் சென்னை அக்கா வீட்டில் தங்கினேன். அங்கு வந்த கலிவரதன் அறையில் அடைத்து பலாத்காரம் செய்தார். அலைபேசியில் வீடியோ எடுத்து வைத்துள்ளதாக கூறி பலமுறை பலாத்காரம் செய்தார். கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X