பொது செய்தி

தமிழ்நாடு

பின்லாந்து நாட்டின் தொழில் நுட்பம் அரசு பள்ளியில் துவக்கம்

Updated : டிச 01, 2020 | Added : டிச 01, 2020
Share
Advertisement
பல்லடம்:பின்லாந்து நாட்டின் தொழில்நுட்பத்தை செயல்படுத்தும் முயற்சியில், செஞ்சேரி அரசு பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.கோவை மாவட்டம், சூலூர் தாலூகா சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட செஞ்சேரி அரசு நடுநிலை பள்ளியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். நடப்பு கல்வி ஆண்டில் சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற இப்பள்ளியில், பின்வந்த நாட்டின் தொழில்
 பின்லாந்து நாட்டின் தொழில் நுட்பம் அரசு பள்ளியில் துவக்கம்

பல்லடம்:பின்லாந்து நாட்டின் தொழில்நுட்பத்தை செயல்படுத்தும் முயற்சியில், செஞ்சேரி அரசு பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம், சூலூர் தாலூகா சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட செஞ்சேரி அரசு நடுநிலை பள்ளியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். நடப்பு கல்வி ஆண்டில் சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற இப்பள்ளியில், பின்வந்த நாட்டின் தொழில் நுட்பத்தை செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


latest tamil news


இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை கற்பகம் கூறியதாவது: பி.டி.ஏ., ஒருங்கிணைப்புடன் பள்ளியில் ஸ்மார்ட் டிவி., ஸ்மார்ட் வகுப்பறை, கணினி ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை காட்டிலும் மாணவர்களின் சேர்க்கை இதனால் அதிகரித்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக, பள்ளியில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

வரும் கல்வியாண்டு 'விர்ச்சுவல் ரியாலிட்டி' எனும் மெய்நிகர் வகுப்பறை அமைக்க ஆயத்தமாகி வருகிறோம். எதற்காக பயன்படுத்தப்படும் கன்ட்ரோல் யூனிட் கணினியுடன் இணைக்கப்படும். விண்வெளி, வனம், மழை பெய்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை மாணவர்கள் நேரில் பார்க்கும் உணர்வு உருவாகும். பின்லாந்து நாட்டில் பயன்படுத்தப்படும் இத்தொழில்நுட்பம், தமிழ்நாட்டில் முதன்முதலாக இங்கு கொண்டுவரப்பட உள்ளது.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கடந்த ஆண்டு பின்லாந்து நாட்டுக்கு சென்று திரும்பியபோது இத்தொழில்நுட்பம் குறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினார். தன்னார்வலர்கள் உதவியுடன் அரசு பள்ளிகளில் இதை செயல்படுத்த யார் வேண்டுமானாலும் முயற்சிக்கலாம் என்று கூறியிருந்தார் .

அதன்படி, சூலூர் எம்.எல்.ஏ., கந்தசாமி, மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் இத் தொழில் நுட்பத்தை கொண்டு வரும் பணி நடந்து வருகிறது. இதற்கான சோதனை முயற்சி நடந்து முடிந்த சூழலில், வரும் கல்வி ஆண்டு முதல் இத்தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக பல லட்சம் செலவாகும் என்பதால் முதல் கட்டமாக, 8 கண்ட்ரோல் யூனிட்டுகள் மட்டும் தருவிக்க உள்ளோம். மாணவர்களின் கல்வித்திறன் மேம்படுவதுடன், கல்வி கற்பிக்கும் பணியும் இதனால் எளிதாகும் என்றார்.



Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X