சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

வேண்டவே வேண்டாம்!

Added : டிச 01, 2020
Share
Advertisement
வேண்டவே வேண்டாம்!'அந்த பங்களா, ராசியில்லாதது என, அப்போதே கூறினேன்; யாரும் கேட்கவில்லை. இப்போதாவது உணர்ந்தால் சரி' என, பெருமூச்சு விடுகிறார், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ். கடந்த, 2015ல், பீஹார் சட்டசபை தேர்தல் முடிந்ததும், நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவையில், துணை முதல்வராக பதவியேற்றார் தேஜஸ்வி. இவருக்கு, பாட்னாவில் உள்ள, 10, தேஷ்ரத்னா மார்க் என்ற அரசு

அக்கம் பக்கம்


வேண்டவே வேண்டாம்!



'அந்த பங்களா, ராசியில்லாதது என, அப்போதே கூறினேன்; யாரும் கேட்கவில்லை. இப்போதாவது உணர்ந்தால் சரி' என, பெருமூச்சு விடுகிறார், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ். கடந்த, 2015ல், பீஹார் சட்டசபை தேர்தல் முடிந்ததும், நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவையில், துணை முதல்வராக பதவியேற்றார் தேஜஸ்வி. இவருக்கு, பாட்னாவில் உள்ள, 10, தேஷ்ரத்னா மார்க் என்ற அரசு பங்களா ஒதுக்கப்பட்டது. ஆனால், ஆளும் கூட்டணிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தேஜஸ்வி யாதவ், துணை முதல்வர் பதவியை இழக்க வேண்டியிருந்தது. அவருக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவிலிருந்தும் வெளியேறினார். அப்போது சிலர், 'நீங்கள் குடியிருந்த பங்களாவின் வாஸ்து சரியில்லை; அதனால் தான், உங்கள் பதவி போய் விட்டது' என, தேஜஸ்வியிடம் கூறினர். இது குறித்த தகவல்களை, தன் நண்பர்களிடம் கூறி
வருத்தப்பட்டார். அவருக்குப் பின், துணை முதல்வராக பதவியேற்ற, பா.ஜ.,வின் சுஷில்குமார் மோடி, அந்த அரசு பங்களாவில் குடியேறினார். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்றாலும், சுஷில்குமார் மோடிக்கு, துணை முதல்வர் பதவி கிடைக்கவில்லை.பா.ஜ.,வின் ரேணுதேவி, தர்கிஷோர் பிரசாத் ஆகியோர், துணை முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவருக்கு, சர்ச்சைக்குரிய பங்களாவை ஒதுக்க, அரசு முடிவு செய்துள்ளது. பங்களாவின் வாஸ்து பற்றி கேள்விப்பட்ட, அவர்கள் இருவரும், 'அய்யய்யோ... அந்த பங்களா எங்களுக்கு வேண்டவே வேண்டாம்' என, அலறுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X