பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : டிச 01, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
டிச., 2, 1960ஆந்திர மாநிலம், ஏலுாரு என்ற இடத்தில், 1960 டிச., 2ம் தேதி பிறந்தவர், விஜயலட்சுமி. இளம் வயதில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளானார். திருமண வாழ்க்கையும், துயரத்தையே தந்தது. வறுமையில் சிக்கியவர், சென்னைக்கு ஓடி வந்து, ஒப்பனைக் கலைஞராக, சினிமா துறைக்குள் நுழைந்தார். வண்டிச்சக்கரம் என்ற படத்தில், 'ஸ்மிதா' என்ற பெயரில், நடிகையாக அறிமுகமானார். அப்படத்தில், 'சிலுக்கு' என்ற
 இதே நாளில் அன்று

டிச., 2, 1960

ஆந்திர மாநிலம், ஏலுாரு என்ற இடத்தில், 1960 டிச., 2ம் தேதி பிறந்தவர், விஜயலட்சுமி. இளம் வயதில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளானார். திருமண வாழ்க்கையும், துயரத்தையே தந்தது. வறுமையில் சிக்கியவர், சென்னைக்கு ஓடி வந்து, ஒப்பனைக் கலைஞராக, சினிமா துறைக்குள் நுழைந்தார். வண்டிச்சக்கரம் என்ற படத்தில், 'ஸ்மிதா' என்ற பெயரில், நடிகையாக அறிமுகமானார். அப்படத்தில், 'சிலுக்கு' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால், சில்க் ஸ்மிதா என்றழைக்கப்பட்டார்.மிகச் சிறந்த நடிகையான இவரை, சினிமா, கவர்ச்சி பதுமையாகவே பயன்படுத்திக் கொண்டது. 1980களில், இவரின் நடனம் இல்லாத படங்களே இல்லை எனலாம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில், 17 ஆண்டுகளில், 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
கடந்த, 1996 செப்., 23ம் தேதி, தன், 35வது வயதில் தற்கொலை செய்து கொண்டார். நடிகை சில்க் ஸ்மிதா பிறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
02-டிச-202006:45:05 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj பிறந்த ஊர் பிறந்த நாள் மற்றும் ஆண்டு மாதம் பிறப்பிலிருந்து பெற்ற பெயர் பின் பெற்ற பெயர் மற்றும் பார்த்திடட பணி நடித்த படங்கள் எல்லாம் வெளிவந்தும் பெற்றோர் பெயர் மற்றும் தற்கொலைக்கான காரணம் வெளிவரவில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X