புதுடில்லி: 'கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் வீட்டுக் கதவில் ஒட்டப்படும், போஸ்டரால் நோயாளிகளை தீண்டதகாதவராக மற்றவர்கள் பார்க்கின்றனர். இதனால், நோயாளிகள் பெரும் மன வேதனைக்கு உள்ளாகின்றனர்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கொரோனா பரவல் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
விசாரணை
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில், 'இந்த வீட்டில் இருப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது' என, 'போஸ்டர்' ஒட்டப்படும் நடைமுறை பல மாநிலங்களில் பின்பற்றப்படுகின்றன. இதற்கு, பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது பற்றி விசாரித்த உச்ச நீதிமன்றம், 'கொரோனா நோயாளி களின் வீட்டுக்கதவில் போஸ்டர் ஒட்டுவதை தவிர்க்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, சமீபத்தில் உத்தரவிட்டது.
இந்த வழக்கு, நீதிபதிகள் அசோக் பூஷண், சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது; அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக் கதவுகளில் போஸ்டர் ஒட்டப்படுவது தொடர்கிறது. இதனால், கொரோனா நோயாளிகளை தீண்டத்தகாதவர்கள் போல், மற்றவர்கள் பார்க்கின்றனர்; இது, அவர்களுக்கு பெரும் மனவேதனையை தருகிறது.
சிக்கல்
போஸ்டர் ஒட்டும் நடைமுறை டில்லியில் கைவிடப்பட்டுஉள்ளது; மற்ற மாநிலங்ககளிலும், இதை பின்பற்றுவதில் என்ன சிக்கல் என தெரியவில்லை.இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில், போஸ்டர் ஒட்ட வேண்டும் என, மத்திய அரசு த்தரவிட வில்லை. கொரோனா தடுப்பு விதிகளிலும், அவ்வாறு கூறப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.இதையடுத்து, விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
நீதிபதிகள் கடும் அதிருப்தி
கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், மார்ச், 25 முதல், உச்ச நீதிமன்றத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாகவே, வழக்கு விசாணையை நீதிபதிகள் நடத்தி வருகின்றனர். இதனால், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர், நீதிமன்றத்துக்கான உடையை அணியாமல் ஆஜராகின்றனர். சில மாதங்களுக்கு முன், வழக்கறிஞர் ஒருவர், உள்ளாடை மட்டும் அணிந்து ஆஜரானது, நீதிபதிகளை அதிர்ச்சியடைய வைத்தது.
இந்நிலையில், நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, வீடியோ கான்பரன்ஸ் வழியாக, நேற்று விசாரணை நடத்தியபோது, சட்டை அணியாமல், ஒருவர் ஆஜரானார். இதைப் பார்த்த நீதிபதிகள், கடும் அதிருப்தி தெரிவித்து, 'வீடியோ கான்பரன்ஸ் வழியாக விசாரணை துவக்கி, எட்டு மாதங்களுக்கு மேலாகி விட்டது. ஆனாலும், அநாகரிக செயல்கள் தொடர்வது வேதனை தருகிறது' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE