சியோல்: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், அவரது குடும்பத்தினர், மற்றும் அரசின் உயர் மட்ட அளவிலான நிர்வாகிகள் குழுவினர், சீனாவின் கொரோனா தடுப்பூசியை போட்டுகொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் கிம் ஜாங் உன் மற்றும் பல பல மூத்த வட கொரிய அதிகாரிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக வாஷிங்டனில் உள்ள தேசிய நல சிந்தனைக் குழுவின் மையத்தின் வட கொரியா நிபுணர் ஹாரி காசியானிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான ரகசிய தகவலை, ஜப்பானை சேர்ந்த உளவு அமைப்பும் உறுதி செய்துள்ளது. கடந்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் கிம் ஜாங் குடும்பத்தினர் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக ஜப்பான் உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ள வட கொரியாவுக்கு இருக்கும் ஒரே ஆதரவு நாடு சீனா மட்டும்தான். இந்நிலையில், கொரோனா தடுப்பூசியை சீனாவிடமிருந்து பெற்று போட்டுகொண்டுள்ளதாக தெரிகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE