பொது செய்தி

தமிழ்நாடு

பாம்பன் - குமரியில் வரும் 4ல் கடக்கிறது 'புரெவி' புயல்

Updated : டிச 01, 2020 | Added : டிச 01, 2020 | கருத்துகள் (3+ 14)
Share
Advertisement
சென்னை : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று மாலை, புரெவி புயலாக வலுப்பெற்றது. இன்றும், நாளையும் கன மழையாக கொட்டித் தீர்த்து விட்டு, வரும், 4ம் தேதி காலை, கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரை கடக்கிறது. 'பொது மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்' என்றும், 'தென் மாவட்ட மக்கள், தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்' என்றும், முதல்வர் இ.பி.எஸ்., அறிவுரை

பாம்பன் - குமரியில்!


வரும் 4ல் கடக்கிறது 'புரெவி' புயல்

சென்னை : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று மாலை, புரெவி புயலாக வலுப்பெற்றது. இன்றும், நாளையும் கன மழையாக கொட்டித் தீர்த்து விட்டு, வரும், 4ம் தேதி காலை, கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரை கடக்கிறது. 'பொது மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்' என்றும், 'தென் மாவட்ட மக்கள், தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்' என்றும், முதல்வர் இ.பி.எஸ்., அறிவுரை கூறியுள்ளார்.

வங்கக் கடலில் உருவான, 'நிவர்' புயல், ஒரு வாரத்துக்கு முன், புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதை தொடர்ந்து, வங்கக் கடலில் மீண்டும், ஒரு புயல் சின்னம் உருவாகியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது வலுப்பெற்று, நேற்று மாலை புயலாக உருவெடுத்தது.
இந்தப் புயல், இலங்கையின் திரிகோணமலையில் இருந்து, 400 கி.மீ., தென்கிழக்கே மையம் கொண்டுள்ளது. திரிகோணமலை அருகே, இன்று மாலை கரை கடக்கிறது. அதன்பின், நாளை மன்னார் வளைகுடாவை கடந்து செல்லும். இதைத் தொடர்ந்து, தமிழக தெற்கு கடலோர பகுதியான, பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே, வரும், 4ம் தேதி அதிகாலையில், பலத்த காற்றுடன் கரையை கடக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


சூறாவளியுடன் மழைவங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்றே புயலாக வலுப்பெறும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று மாலை புயலாக மாறியது. இதற்கு, ‛புரெவி' என, பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயலால், தென் மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன், அதி கனமழை பெய்யும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.


* இன்றுதென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும். மணிக்கு, 65 கி.மீ. வேகம் வரை சூறாவளி காற்று வீசும்.
புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலுார், அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யும். திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில், சில இடங்களில் கன மழை பெய்யும்.


* நாளை
தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், அதி கன மழை பெய்யும். சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யும். மணிக்கு, 90 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில், மிதமான மழை பெய்யும்.


சென்னையில் எப்படி?சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதிகபட்சம், 30 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும்.நேற்று காலை நிலவரப்படி, திருப்பூண்டி, வேதாரண்யம், 4; மயிலாடுதுறை, 3; நாகை, குடவாசல், 2; திருவாடானை, மண்டபம், பேரையூர், 1 செ.மீ., மழை பெய்துள்ளது.


மீனவர்களுக்கு எச்சரிக்கைவங்கக் கடலில், இன்று புயல் உருவாக இருப்பதால், கடலில் மீன்பிடித்து வரும் மீனவர்களை, கரைக்கு திரும்புமாறு, இந்தியக் கடலோரக் காவல் படை அறிவுறுத்தி வருகிறது.
இதுகுறித்து, இந்திய கடலோரக் காவல் படையினர் கூறியதாவது:தென் மேற்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக மாறுகிறது. இதனால், கடலில் மீன்பிடித்து வரும் மீனவர்கள், உடனடியாக கரைக்கு திரும்புமாறு, அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.இதற்காக, எட்டு ரோந்து கப்பல்கள் மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வணிகக் கப்பல்கள் மற்றும் மீன்படி படகுகளுக்கு, தொடர்ந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


முதல்வர் அறிவுரை'தமிழகத்தில், நாளை மறுதினம் வரை, பெரும் மழையும், புயலும் வீசக்கூடும் என்பதால், மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில், மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்' என, முதல்வர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்

.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும்பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று, சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது. முதல்வர் இ.பி.எஸ்., தலைமை வகித்தார். துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


கூட்டம் முடிந்த பின், முதல்வர் வெளியிட்ட அறிக்கை:* கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில், சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள் முகாமிட்டு, முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை, கண்காணிக்க வேண்டும்.

* மின் வாரியம், கூடுதலாக 1,000 பணியாளர்களுடன், தயார் நிலையில் இருக்க வேண்டும்.

* நீர் நிலைகளின் ஓரம் மற்றும் கடற்கரை ஓரங்களில், மக்கள் கூடாமல் இருக்க, தேவையான அறிவிப்பு வெளியிட வேண்டும்.


* நிவாரண முகாம்களில், குடிநீர், சுத்தமான கழிப்பறை, 'ஜெனரேட்டர்' வசதி, தேவையான பாய், போர்வை போன்ற வசதிகள் இருப்பதை, உறுதி செய்ய வேண்டும்
.

* அனைத்து நிவாரண முகாம்களிலும், கிருமி நாசினிகள், முகக் கவசங்கள் தேவையான அளவு, இருப்பு வைக்க வேண்டும்
.

* மீனவர்களின் வாழ்வாதாரங்களான கட்டுமரங்கள், மின் மோட்டார் படகுகள், மீன் வலைகள் ஆகியவற்றை, உரிய முறையில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

* நீர் நிலைகள் பாதுகாப்பாக இருப்பதை, உறுதி செய்வதுடன், தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்


முதல்வர் வேண்டுகோள்.* வரும், 4ம் தேதி வரை பெரும் மழையும், புயலும் வீசக்கூடும் என்பதால், மக்கள் அச்சப்பட வேண்டாம். எச்சரிக்கை விடுக்கப்பட்ட தென் மாவட்டங்களில், மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

* அண்டை மாநிலத்தின் கடற்பகுதியில், மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள், அந்தந்த மாநிலங்களின் கரையை அடைய அனுமதிக்கும்படி, மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

* மின் கம்பிகள், தெரு விளக்கு கம்பங்கள், மின் மாற்றிகள் ஆகியவற்றுக்கு, அருகில் செல்லவோ, தொடவோ வேண்டாம். வீடுகளின் மின் சாதன பொருட்களை, கவனமாக கையாள வேண்டும்.

* அதிகாரப்பூர்வ மற்றும் நம்பத்தகுந்த ஊடகங்களில் வரும் செய்திகளை கேட்கவும். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். 'TN-SMART' மொபைல் ஆப் மற்றும் 'TNSDMA டுவிட்டர்' வழியாக, முன்னெச்செரிக்கை செய்திகள், பொது மக்களுக்கு அனுப்பப்படுகின்றன.


அனைத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளும், போர்க்கால அடிப்படையில் எடுக்கப்படுவதால், பொது மக்கள் புயல் குறித்து, எந்தவித அச்சமும் அடைய தேவையில்லை. அரசின் அறிவுரைகளுக்கு தகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (3+ 14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
02-டிச-202007:43:34 IST Report Abuse
g.s,rajan எல்லாரும் வெளியே போகவேண்டாம் என்று முதல்வர் அறிவுறுத்தும் வேளையில் மக்கள் எல்லாருக்கும் அவங்க அவங்க அக்கவுண்ட்ல தேவையான பணம் போட்டு விடுங்க , ரெண்டு மூணு நாள் தனியார் அரசாங்க பணிகளில் இருப்பவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய லீவு கொடுங்க ,வேளா வேளைக்கு வயிறு பசிக்கும் ,வீட்டுக்குள் சாப்பிட்டு ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் வெளியில் வீணாக அலைய வேண்டாம் மக்கள் எவருமே வெளியில போக விரும்பவே மாட்டாங்க . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Cancel
கருப்பட்டி சுப்பையா தேவர் - தூத்துக்குடி,இந்தியா
02-டிச-202007:06:16 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா தேவர் 38 MP க்கள் கொடுத்தீங்களே தமிழர்களே, ஒருத்தராவது எட்டி பாத்தாங்களா??? நிவர் புயலுக்கே வெளிய வராத தமிழக 38 MP க்கள் வழக்கம்போல இந்த புரெவி புயல்லையும் வீட்டுல ஜாலியா இருப்பாங்க. மக்களுக்காக உழைக்கும் எடப்பாடி வாழ்க.
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
02-டிச-202004:15:58 IST Report Abuse
RaajaRaja Cholan இறைவா குமரி மாவட்டம் மற்றும் அணைத்து மாவட்ட மக்களையும் இந்த புயலில் அதிக சேதங்கள் இன்றி காத்து அருள்வாய் , முருகா கந்தா வேலா சரவணா குமரா ஷண்முகா சுப்ரமணியனே தண்டாயுதபாணி வேண்டுகிறோம் உன்னை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X