அரசியல் செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து துறை முறைகேடு விசாரணை கேட்கிறார் ஸ்டாலின்

Updated : டிச 03, 2020 | Added : டிச 01, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை: 'வாகனங்களுக்கு, எப்.சி., வழங்குவதற்கு, தனியார் நிறுவனங்கள் வாயிலாக, போக்குவரத்து துறையில் நடந்த மெகா வசூல் குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:வட்டார போக்குவரத்து அதிகாரியான, ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கு, எப்.சி.,எனும் தகுதிச் சான்று பெறச் செல்லும் வாகனங்களுக்கு, ஒரு குறிப்பிட்ட தனியார்
போக்குவரத்து துறை ,முறைகேடு விசாரணை ,ஸ்டாலின்

சென்னை: 'வாகனங்களுக்கு, எப்.சி., வழங்குவதற்கு, தனியார் நிறுவனங்கள் வாயிலாக, போக்குவரத்து துறையில் நடந்த மெகா வசூல் குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:வட்டார போக்குவரத்து அதிகாரியான, ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கு, எப்.சி.,எனும் தகுதிச் சான்று பெறச் செல்லும் வாகனங்களுக்கு, ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திடம் இருந்து தான் ஒளிரும் பட்டை, வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, ஜி.பி.எஸ்., கருவி போன்றவை வாங்க வேண்டும் என, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், போக்குவரத்துத் துறைக்குள் சில தனியார் நிறுவனங்களை அனுமதித்து, அவற்றின் வாயிலாக, மெகா வசூல் செய்யும் மோசடி நடக்கிறது.

தனியார் நிறுவனங்களிடம் இருந்து, அங்கீகாரக் கடிதம் பெற்று, எப்.சி., புதுப்பிக்க வேண்டும் என்பதும் தொடருகிறது. அங்கீகாரம் கடிதம் பெற வேண்டும் என கட்டாயப்படுத்துவதை, உடனே போக்குவரத்துத் துறை அமைச்சர் கைவிட வேண்டும். தனியார் நிறுவனங்களுக்கு, ஏன் இந்த உத்தரவு அளிக்கப்பட்டது;இதுவரை, கமிஷன் வசூல் எவ்வளவு; மக்களின் பாதுகாப்புக்கு எதிரான விதிமுறைகளை வகுத்து கொடுத்தது யார் என்பது குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும். தி.மு.க., ஆட்சி அமைந்ததும், போக்குவரத்து துறை முறைகேடு தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Giri -  ( Posted via: Dinamalar Android App )
02-டிச-202020:43:22 IST Report Abuse
Giri உன்னபத்திபேச வார்த்தைஇருக்கு.
Rate this:
Cancel
02-டிச-202015:24:22 IST Report Abuse
கொத்து பரோட்டா கோவிந்து சுடலை சார் ..இந்த வருடம் லண்டன் போகலையா ?
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
02-டிச-202009:40:35 IST Report Abuse
Balasubramanian Ramanathan எதுக்கு செந்திதில் பாலாஜிக்கு ஆப்பு வக்கிறீக அப்பு. அவரு திமுகவுக்கு நல்லாத்தானே தலபுராணம் பாடறாரு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X