அகந்தையை கைவிடுங்கள்!
விவசாயிகளின் கடின உழைப்புக்கு, நாம் அனைவருமே கடன்பட்டு உள்ளோம்; அவர்களுக்கான நீதியை வழங்குவதன் வாயிலாக மட்டுமே, அந்த கடனை திருப்பிச் செலுத்த முடியும். எனவே, மத்திய அரசு அகந்தையை கைவிட்டு, போராடும் விவசாயிகளுக்கான உரிமையை வழங்க வேண்டும்.
ராகுல்
எம்.பி., - காங்கிரஸ்
அபகரிக்க சதி திட்டம்!
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குகிறோம் என்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்து, புதிய வேளாண் சட்டம் என்ற பெயரில், விவசாய நிலங்களை அபகரிக்க, பா.ஜ., சதி திட்டம் தீட்டுகிறது. பா.ஜ.,வின் கதை, இதோடு முடிந்தது.
அகிலேஷ் யாதவ்
தலைவர், சமாஜ்வாதி
சமரசம் இல்லா வளர்ச்சி
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமல்படுத்தியுள்ள புதிய வேளாண் சட்டங்கள், உலக நாடுகளுக்கும், நம் சமுதாயத்திற்கும், தொழில்துறைக்கும், விவசாயிகளுக்கும் ஒன்றை தெளிவாக உணர்த்துகிறது. இங்கு, விவசாய தொழில் வளர்ச்சி அடைவதற்கான சூழல் ஏற்பட்டுஉள்ளது. இந்த வளர்ச்சியை, எந்தவிமான சமரசமும் இல்லாமல் செயல்படுத்த, அரசு முயற்சிக்கிறது.
ஸ்மிருதி இரானி
மத்திய ஜவுளித்துறை அமைச்சர், பா.ஜ.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE